எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter

அஹமத் முனவ்வரின் நூல் வெளியீடு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஷட். அஹமட் முனவ்வர் எழுதியஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை+ கலாபூஷணம் எம்.இஸட். அஹமத் முனவ்வர்எனும்  நூல் வெளியீடும் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தஃவா பணி புரிந்தவர்களான  உலமாக்களுக்குபொற்கிழிவழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இம்மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு - 07இல் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஸமீல் (நளீமி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாராளுமன்ற பிரதம கொரடாவுமான கயந்த கருணாதிலக கலந்து கொள்கிறார்.

நூலின் முதற்பிரதியை மூஷான் இன்டர்நெஷனல் தலைவர், முஸ்லிம் ஸலாஹுதீன் பெற்றுக் கொள்கிறார்.
நிகழ்வில், “ஊடகமும் முஸ்லிம்களும்எனும் தலைப்பில் கொழும்பு கோட்டே ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தவுள்ளார்.
விழாவின் கௌரவ அதிதிகளாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன், மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச். ஹலீம்தேசிய ஒருங்கிணைப்பு உரையாடல் அமைச்சர் மனோ கணேஷன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர்ரஹ்மான், கொழும்பு மாவட்ட முன்னாள் மேயர் .ஜே.எம். முஸம்மில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விசேட அதிதியாக மலேசிய டீ.டீ. இன்டர் நெஷனல்  பணிப்பாளர் அஷ்ஷெய்க் மௌலானா முஹம்மத் அப்துல் காதிர் மற்றும் சிங்கப்பூர் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் பொது உறவுகள் மற்றும் வணிக ஆலோசகருமான செயிட் ஜஹாங்கீர் மற்றும் தமிழ் நாடு, சென்னையிலுள்ள ஹாஜரா ட்ரேடர்ஸ் உரிமையாளரான எம்.எஸ். றஹ்மதுல்லாஹ் ஆலிம் இப்னு சம்சுதீன் ஆலிம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் விசேட பேச்சாளரை அறிமுகம் செய்வதோடு, நூல் நயவுரையை - அட்டுளுகம, அல்- கஸ்ஸாலி மத்திய கல்லூரி அதிபர் அஷ்செய்க் எம்.ஜே.எம். மன்சூர் (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.

பிஞ்சுமனம்சிறுவர் நிகழ்ச்சிவாயிலாக வானொலியில் கால் பதித்த அஹ்மத் முனவ்வரின் ஊடகப் பணி விரிவாகி - விசாலமடைந்ததினால் அவர் முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகவும் பதவியேற்றார்.

எல்லாத் துறை சார்ந்தோரின் நட்பும் இவருக்கு இருக்கிறது. அதனால்தான் ஊடகத்துறைக்கு அப்பாற் சென்று சமுதாய தாக்கத்துக்குரிய பல நிகழ்வுகளை இவரால் சிறப்பாக நடத்த முடிந்தது. கல்வித்துறையில் நம் சந்ததியினர் மேலோங்கவும் சமுதாய விழிப்புணர்வை காணவும் இவர் முன்னின்று நடத்திய நிகழ்வுகள் எல்லாமே மெச்சுக்குரியவைகளே!

வெளிவரவிருக்கும் இவரதுஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை+ கலாபூஷணம் எம்.இஸட். அஹமத் முனவ்வர்எனும் நூல் முஸ்லிம் சேவையின் வரலாற்றுப் பின்னணியை இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்துகிறது. உலமாக்களை, அறிஞர்களை, மூத்தோரை நம் இளையோரை கண்ணியப்படுத்தி கௌரவப்படுத்தும் இவரது பங்களிப்புகள் எவரையும் ஈர்க்கக் கூடியவைகளே!

இவ்விழாவில், கௌரவிக்கப்படும் உலமாக்கள் முறையே  வெலிகம - மௌலவி ஜமாலியா செய்யத் ஹாரிஸ் மௌலானா, கொழும்புமௌலவி எம்.எம். .முபாரக், நாவலப்பிட்டிய - எம்.கியூ. புர்கானுதீன் அஹமத், நீர் கொழும்பு - மௌலவி எம்.சி. ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர், சம்மாந்துறை - மௌலவி .சி..எம். புஹாரி, கள் - எலிய - மௌலவி .எல்.அலியார், மக்கொன - மௌலவி எம்.ஆர்.எம். நிஷாம், கொழும்பு - மௌலவி யூசுப் நஜிமுடீன், கொழும்பு - காதிபுல் குலபா மௌலவி ஜே.அப்துல் ஹமீட், கஹடோவிட மௌலவி எம்.இஷட்.எம். ஹுசைன், உயன்வத்த - மௌலவி முக்தார் . செய்னுடீன், மல்வானை - மௌலவி எம்.எச்.எம். லாபீர், தெஹிவளை - மௌலவி .ஆர்.அப்துல் றஸ்ஸாக், கஹடோவிட - மௌலவி எம்.என்.எம். இஜ்லான், திஹாரிய - மௌலவி எம்.ஆர்.எம். மஹ்ரூப், கொழும்பு - மௌலவி எம்.. அப்துல் ஜப்பார், தெஹிவளை - மௌலவி எஸ்.எம்.ஆரிப், கள் - எலிய - மௌலவி எம்.வை.எம். ஜாபீர், கலாவெவ - மௌலவி ஜே.எல். சலாஹுதீன், மொரட்டுவ - மௌலவி ஜே. மீராமுஹைதீன், கஹடோவிட - மௌலவி ..எம். அப்துல் சலாம், சாய்ந்தமருது - மௌலவி .எம்.. அஸீஸ், கொழும்பு - மௌலவியா  மலீஹா சுபைர், கொழும்பு - மௌலவி எம். முஸ்னி அமீர், கஹடோவிட - மௌலவி எம்.எஸ்.எம். இஸ்மாயில், வெலிகம - மௌலவி எம்.ஆர்..எம். அஸ்ஹர், கஹட்டோவிட்ட - மௌலவி எம்.. எம்.அலவி ஆகிய உலமாக்கள் தலா 10,000 ரூபா பெறுமதியானபொற்கிழிவழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.


இந் நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பணிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், பிரபல உலமாக்கள்இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


(எம்.எஸ்.எம்.சாஹிர்)
Thursday, August 04, 2016 |
மேலும் »

துறைமுக அதிகார சபை ஊழியர்களின் விழிப்புணர்வு பாதயாத்திரை

இலங்கை துறைமுக அதிகாரசபையின் 37ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறுநீரக நோயாளர்களுக்கு துறைமுக அதிகார சபையினால் நிதி சேகரித்து பங்களிப்பு செய்யும் முகமாக விழிப்புணர்வு சம்பந்தமான பாதயாத்திரை  துறை முக அதிகாரசபை ஊழியர்களினால் (02.08.2016) மேற்கொள்ளபட்டது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கிணங்க, துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்பிக ரணதுங்கவின் தலைமையில்(02.08.2016) காலை 8 மணி முதல் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்து துறைமுக அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு முன்னால் 11 மணியளவில் பாதயாத்திரை நிறைவு பெற்றது.


இதில் துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்பிக ரணதுங்க, உட்பட உயர் முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பகுதி தலைவர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் துறைமுக ஊழியர்கள் என சுமார் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.சாஹிர்)
Thursday, August 04, 2016 |
மேலும் »

26வது ஆண்டு ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக –காத்தான்குடியில் -மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்-படங்கள்.


'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்',இரத்ததானம் -உயிர் காக்கும் நம்பிக்கை  எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 27 வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் மனிதாபிமான மற்றும் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ஷூஹதாக்களின் ஞாபகார்த்த நினைவாக  5வது மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம் 03-08-2016 இன்று புதன்கிழமை காத்தான்குடி-01 ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.
இஸ்லாமிய இளைஞர் முன்னணியின்; தலைவர் பீ.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி 5வது இரத்ததான முகாமில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள்,தாதியர்கள்,காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது இரத்ததானம் வழங்குவோரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஸ் பரிசோதித்தார்.

இங்கு ஆண்கள் ,பெண்கள்,இளைஞர்கள்,யுவதிகள் தங்களது இரத்தத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கினர்.

குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக,கல்வி,தஃவா ஆகிய பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
Thursday, August 04, 2016 |
மேலும் »

கேள்விக்குறியாகும் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்

கடந்த சில வாரங்களுக்கு முன் அனைத்துப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தமது 7 கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி கடந்த மாதம் 13,14ஆம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். எனினும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகள் கிட்டாத நிலையில் கடந்தமாதம் 27ஆம் திததி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இத்தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மேலும் இவ்வேலை நிறுத்தத்ததால் நீர், மின்சாரம், விடுதி வசதி, விடுதி குளியலறை வசதிகள் போன்றனவும் தடைப்பட்டுள்ளன. இதனால் அனைவரும்; பல்கலைககழகம் மற்றும் விடுதிகளை விட்டும் வெளியேறியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, இவ்வாறான பணி பகிஷ்கரிப்புக்களால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருந்தால் மாணவர்கள் தம் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது. மற்றும் இவர்களுடைய கல்வியாண்டு காலம் எவ்வாறு உரிய நேரத்தில் முடிவடையும்.

ஏற்கனவே 2012/2013, 2013/2014, 2014/2015 கல்வியாண்டு மாணவர்களை உயர்தர பரீட்சை சித்தியடைந்த காலத்தில் இருந்து சுமார் 2 வருட காலத்திற்கு பின்னர்தான் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கியுள்ளார்கள். தற்போதுள்ள கல்வித்திட்டத்தின் படி மாணவன் ஒருவன் உயர்தரப்பரீட்சை எழுதியதில் இருந்து 2 வருட காலம் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்து.

பின்னர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்திசெய்ய குறைந்தது 3 ஆண்டுகளுமாக மொத்தமாக ஆகக்குறைந்தது 5 வருட காலத்தினை செலவுசெய்ய வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் இவ்வாறான வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெறுவதினால் இப்பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியாண்டு காலம் வரையறையின்றி கூடிச் செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களாகிய நாங்களே.

மேலும் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களில் கடமையாற்றுபவர்கள் அனைவரும் மாணவர்களுக்காகவே என்று வாழையடிவாழையாக கூறப்பட்டு வந்தாலும் அது வெறும் சித்தாந்தமாக மாத்திரமே உள்ளது.

உண்மையில், நடைமுறையில் மாணவர்களின் தேவைகளுக்கு அப்பால் மற்றவர்களின் தேவைகளுக்காக வேண்டித்தான் அதிகமான நேரங்களில் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன. 

இது ஒருபுறமிருக்க இன்று எவ்வித கஷ்டங்களுமின்றி, பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் படும் கஷ்டங்களில் இருந்து அரைவாசி கஷ்டங்களைகூட பெறாமல் குறிப்பிட்ட 3 வருட காலத்திற்குள் பட்டப்படிப்பை முடித்துச் செல்லும் வெளிவாரி மாணவர்களுக்கு தானா இந்த கல்வித்திட்டம்?

க.பொ.த. உயர்தர பரீட்சையில் கூடிய இஸட் வெட்டுப்புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பல்வேறு கஷ்டங்கள், பகிடிவதை, வேலை நிறுத்தங்களுக்கு மத்தியில் அடிபட்டு பட்டப்படிப்பை பூர்த்திசெய்து தொழிற்சந்தைக்கு சென்றால் உள்வாரி பட்டதாரிகளுக்கும், வெளிவாரி பட்டதாரிகளுக்கும் சம பட்டம், சம கவனிப்பே. இது எந்தவகையில் நியாயம்? இதற்குத்தானா கஷ்டப்பட்டு படித்து, கூடிய இஸட் வெட்டுப் புள்ளிகளை பெற்று, விடுதியில் தங்கி, பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அனைத்து விடயங்களையும் சகித்து, அனுசரித்து படித்து பட்டம் பெற்றது?

ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டின் கல்வித்திட்டம் இது தானா? இதற்கிடையில் வேலைநிறுத்தம் காரணமாக கல்வியாண்டு இன்னும் தள்ளிப் போகிறது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளால் கல்வியாண்டு காலங்களை அதிகரித்து மாணவர்ககளின் வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள். எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மிக விரைவில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு.

பி.எம். சக்ரி
2ஆம் வருடம்
அரசியல் விஞ்ஞானதுறை,
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
Wednesday, August 03, 2016 |
மேலும் »

நல்லது செய்திருந்தால் ஏன் இந்த நடை?

ஆட்சியை இழந்த மஹிந்த ராஜபக்ஸ அதை மீளக்கைப்பற்றுவதற்கு இப்போது மிகவும் போராடுகின்றார்.அரசுக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி-சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதத்தைக் கிளப்பி அரசைக் கவிழ்ப்பதற்கு சதி செய்கிறார்.அதற்காக அவர் இப்போது நடையாய் நடக்கின்றார்.மாவனெல்லையில் இருந்து கடந்த மாதம் 28 ஆம் திகதி நடக்கத் தொடங்கியவர் நேற்று கொழும்பில் அதை நிறைவு செய்தார்.
மிகவும் பலமான ஓர் ஆட்சியைக் கட்டி எழுப்பியிருந்த மஹிந்த அதை இழந்து தவிப்பது ஏன்?அந்த ஆட்சி சரிவதற்குக் காரணம் என்ன ?போன்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில் ''அக்கிரம ஆட்சிதான்''.

நியாயமான ஆட்சி ஒன்றை நடத்தி இருந்தால் இப்படி கால் வலிக்க நடக்கத் தேவை இல்லை என்ற ஜனாதிபதி மைத்திபாலவின் கருத்து இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுந்திப் போகின்றது.இந்தக் கருத்து முற்றிலும் உண்மை.

மஹிந்தவின் அரசு ஒரு கட்டத்தில் அசைக்கமுடியாத மிகவும் பலமான அரசாகத் திகழ்ந்தது.பல தசாப்தங்களுக்கு இவரது பரம்பரையே நாட்டை ஆளப்போகின்றது என்று நம்பப்பட்டது.ஆனால்,அநியாயத்தால் கட்டி எழுப்பப்படும் அரசு எவ்வளவு பலமானதாக இருந்தாலும் அது தற்காலிக பலமே என்பதற்கு மஹிந்த அரசு சிறந்த உதாரணமாக அமைந்துவிட்டது.

யுத்த வெற்றி என்ற ஒரேயொரு காரணத்தால்தான் அவரது அரசு பலமடைந்து இருந்தது.ஆனால்,அந்த யுத்த வெற்றிக்குள் புதைந்திருந்த மக்களின் கண்ணீர்,அடக்குமுறை  மற்றும் இனவாதம் போன்றவை அந்த யுத்த வெற்றியை சிதைத்துவிட்டன .அந்தச் சிதைவே மஹிந்த அரசின் சிதைவாக மாறியது.

மஹிந்த ஆட்சி எவ்வளவு கொடூரமானது-எவ்வளவு இனவாதமிக்கது-சிறுபான்மை இன மக்களுக்கு எவ்வளவு பாதகமானது என்பதை நாம் அறிவோம்.மஹிந்தவின் ஆட்சி நெடுகிலும் இந்த நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் கண்ணீருடனும் கவலையுடனும்தான் காலத்தைத் தள்ளினர்.

இந்த நாட்டில் சிறுபான்மை இனம்,பெரும்பான்மை இனம் என்று யாருமில்லை.எல்லோருமே இலங்கையர்கள் என்று கூறிக்கொண்டே சிறுபான்மை இன மக்களை மிகவும் மோசமாக நடத்தத் தொடங்கினார் மஹிந்த.ஆனால்,அந்த மக்களின் கண்ணீரில்தான் மஹிந்தவின் ஆட்சி மூழ்கியது.

யுத்த வெற்றியின் பெயரில்-அதன் மமதையில் சிறுபான்மை இன மக்களுக்கு மஹிந்த செய்த அநியாயங்கள் அனைத்தும் ஒன்று திரண்டே மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தன.மக்களின் கண்ணீரால் கட்டி எழுப்பப்படும் ஆட்சி நிலைக்காது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட மஹிந்த பதவி மோகம் காரணமாக குறிகிய காலத்துக்குள்ளேயே அரசியலுக்குத் திரும்பி வந்துவிட்டார்.இன்று அவர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக படாதபாடு படுகின்றார்;நடையாய் நடக்கின்றார்.

பாத யாத்திரை வென்றதா?
========================

ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த மாதம் 28 ஆம் திகதி மாவனெல்லையில் வைத்து மஹிந்தவால் தொடங்கப்பட்ட பாத யாத்திரை நேற்று கொழும்பில் முடிவடைந்தது.கொழுப்பு கரைந்து சீனி நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தவிர வேறு எந்த பயனையும் இந்தப் பாத யாத்திரை மஹிந்த தரப்புக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.

10 லட்சம் பேரை இந்தப் போராட்டத்தில் இறங்குவோம் என்று கூறினர்.ஆனால்,வெறும் 10 ஆயிரம் பேரைக்கூட அவர்களால் இறக்க முடியவில்லை.5 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே அதில் கலந்துகொண்டனர்.

பாத யாத்திரையில் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் என்று காட்டுவதற்காக நீண்ட  இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நடந்து சென்ற அந்தக் கேவலமான தந்திரோபாயத்தையும் நாம் கண்டோம்.தேவையா இந்தப் பிழைப்பு  என்று பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு அந்தக் காட்சி அமைந்திருந்தது.

நாமலின் வினோத நடனம்
========================

நாமலின் நடனத்தைக் காண்பதற்காக வீதியோரங்களில் ஒன்றுகூடிய மக்களையெல்லாம் பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் பட்டியலில் சேர்த்து கணக்கு காட்டும் அளவுக்கு மஹிந்தவின் அரசியல் வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டமை பரிதாபத்திலும் பரிதாபம்.

உண்மையில்,இது ஆட்சியைப் பிடிக்கும் பாத யாத்திரையா அல்லது நாமலின் வினோத நடனத்தை பிரபல்யப்படுத்தும் வைபவமா என்று கேட்கும் அளவுக்குத்தான் அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

நாமல் ஆடி வருகின்றார் என்று கேள்விப்பட்டே மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் ஒன்றுகூடினர்.ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீதியில் நடனமாடி வந்தால் அது மக்களுக்கு கண்கொள்ளாக் காட்சிதானே.அந்தக் கண்ராவியைக் காண்பதற்கு மக்கள் குவியத்தானே செய்வார்கள்.அவ்வாறு குவிந்தவர்கள் அனைவரையும் பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் என்று கூறுவது கேவலத்திலும் கேவலம்.

மொத்தத்தில் இந்தப் பாத  யாத்திரை கொழுப்பைக் குறைப்பதிலும் சீனி நோயைக் கட்டுப்படுத்துவதிலும் வெற்றிகண்டுள்ளதே தவிர அரசியல்ரீதியாக எந்தவொரு நன்மையையும் மஹிந்தவுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.இந்தப் போராட்டம் நாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.ஓரிரு நாட்களாக ஊடகங்களுக்கு செய்தியாகப் போனதோடு சரி.அவ்வளவுதான்.

இனவாதத்தைக் கக்கிய பாத யாத்திரை
===================================
இந்தப் பாத யாத்திரையில் அதிகம் எழுப்பப்பட்டது சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இனவாதக் கோசம்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த அரசு தமிழீழத்தை உருவாக்கப் போகின்றது என்றும் புலிகள் மீண்டும் வர போகிறார்கள் என்றும் பௌத்த மதம் அழியப்  போகின்றது என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழையப் போகின்றார்கள் என்றும் பலதரப்பட்ட இனவாதக் கோஷங்கள் அந்த யாத்திரையில் எழுப்பட்டதை கேட்கக்கூடியதாக இருந்தது.

மஹிந்த தரப்பின் இனவாத சிந்தனைக்கு தீனி போடும் ஒரு நிகழ்வாகவும் இந்த யாத்திரை அமைந்திருந்தது என்றும் சொல்லலாம்.இனவாதம் அவர்களின் துருப்புச் சீட்டு என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்தே வருகின்றனர்.தோல்வி கண்ட இந்த இனவாதம் இனி ஒருபோதும் வெற்றிபெறா என்பதுதான் யதார்த்தம்.ஆக,இந்தப் பாத யாத்திரை பிசுபிசித்தே போனது.
Wednesday, August 03, 2016 |
மேலும் »

அம்பாறை கரும்பு உற்பத்தியாளர் பிரச்சினையைத் தீர்க்க பிளான்டேஷனுக்கு டிசம்பர் 31 வரை காலக்கெடு

அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த வருட இறுதிவரை ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தை நிருவகிப்பதற்கு கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது.


நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் பங்கேற்ற மூன்றாவது உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன், அமைச்சரின் இணைப்பாளர் எம்.என்.நபீல் ஆகியோர் உட்பட திறைசேரி அதிகாரிகள், கல்லோயா பிளான்டேஷன் நிறுவனப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

“கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினை காலாகாலமாக நீடிப்பதால் இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கண்காணிப்பு குழு (Monitoring Committee ) ஒன்றை அமைக்க வேண்டும்” என அமைச்சர் றிசாத் இங்கு வலியுறுத்தினார். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், கல்லோயா நிறுவனம் தொடர்ந்தும் மனம் போன போக்கில் செயற்படுவது நல்லதல்ல என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

“ மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். அதனால்தான் கரும்பு உற்பத்தியாளர்கள் எங்களிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டுவருகின்றனர். அரசியல்வாதிகளான எங்களுக்கு இதனைத் தீர்த்துவைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து கல்லோயா பிளான்டேஷன் செயற்பட வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

சீனி உற்பத்தியால் தங்களுக்கு இலாபம் கிடைப்பதில்லை என கல்லோயா பிளான்டேஷன் தெரிவிக்கின்றது. கரும்புச் செய்கையாளர்கள் இந்தத் தொழிலால் தாங்கள் கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கும் இந்த உற்பத்திச் செயற்பாட்டில் திருப்தி இல்லை. மூன்று சாராருக்கும் திருப்தி இல்லையென்றால், யாருக்கு இதனால் பிரயோசனம்? என்ற கேள்வியை அமைச்சர் ரவி கருணாநாயக்க எழுப்பினார். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறைக் கச்சேரியில் கல்லோயா பிளான்டேஷனுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றுக்கும் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்தக்  கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரின் இணைப்பாளர் எம்.என்.நபீல், பயனுள்ள கருத்துக்களை வெளியிட்டார். எட்டு மாதத்துக்கு முன்னர் கரும்புச் செய்கையில் ஈடுபட முடியாதிருந்த கரும்பு விவசாயிகளுக்கு, பிளான்டேஷன் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், கரும்புச் செய்கையில் ஈடுபட்டு, அறுவடை செய்யமுடியாதுபோன விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த ஒன்பது வருடங்களாக நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறும்  கல்லோயா பிளான்டேஷன், ஒப்பந்தத்தின்படி எஞ்சியுள்ள ஒரு வருடத்திலும் எவ்வாறு இலாபம் காட்டி கரும்பு உற்பத்தியாளர்களை திருப்திப்படுத்தப்போகிறது  என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.           

சுஐப் எம்.காசிம் 


Wednesday, August 03, 2016 |
மேலும் »

சமூகத்தில் எழுத்தாளர் ஊடகவியலாளர் நிலை பரிதாபத்துக்குரியது “வஸீலா ஸாஹிர்” எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிசாத் பதியுதீன்

முஸ்லிம் சமூகத்தில் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அநேகரது நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. தேவைக்காக அவர்களைப் பயன்படுத்தி விட்டு கைவிடுகின்ற நிலை சமூகத்தில் காணப்படுகின்றது என கைத்தொழில் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தின் எம்.சி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் கல்லொலுவ மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதியநிலவுக்குகள் சில ரணங்கள்சிறுகதை தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும போதே இதனைத் தெரிவித்தார்.நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,

 நல்ல தொரு தலைப்பிலான நிலவுக்குள் சில ரணங்கள் என்ற சிறந்த சிறுகதை படைப்பை வஸீலா ஸாஹிர் தந்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆக்கங்களை, படைப்புக்களை, புத்தகங்களை எழுதுவதென்பது இலகுவான ஒரு காரியமல்ல,

நல்ல, சிறந்த கலைத்துவமிக்க ஒரு நூலாக இந்த நூல் அமைந்திருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறானவர்களை தட்டிக் கொடுத்து அவர்களுடைய திறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேதான் இந்த அழைப்பை நான் ஏற்றேன்.

குறிப்பாக இந்த நாட்டிலே தமிழ், முஸ்லிம் சமூகம் தமிழை தன் தாய் மொழியாகக் கொண்டு பல ஆக்கங்களை உருவாக்கி இருக்கிறது. இந்த தமிழ் மொழிக்காக பாரிய பங்களிப்பை எமது சமூகம் வழங்கி இருக்கின்றது.

 என்றாலும் இந்த நாட்டிலே இங்கு புறையோடிப் போய் இருக்கின்ற இனப் பிரச்சினை, எமது நாட்டிலே எல்லோரையும் வாட்டி வதைக்கின்ற துன்பத்தைத் தந்த அந்தப் பிரச்சினை, இன்று சமாதான காலமாக இருக்கின்ற கடந்த 6வருட காலத்துக்குள் நிம்மதியான ஒரு நல்ல வாழ்வை நோக்கி, நல்ல பொருளாதார வளர்ச்சியை நோக்கி, ஒற்றுமையாக வாழுகின்ற நல்ல சூழ்நிலையை நோக்கி நகரவேண்டும் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டும் பிரார்த்தித்துக் கொண்டும் இருக்கின்ற இந்த நல்ல காலத்திலே, எங்களுடைய சமூகம் பல வகையான சவால்களுக்கு முகங் கொடுத்து வருகின்றது.

அவ்வாறான சவால்களை முறியடிப்பதற்கு ஒரே மொழி பேசுகின்ற, இரண்டு சமூகங்களாக தமிழ், முஸ்லிம் சமூகம் கடந்த சுதந்திரத்துக்குப் பிறகு ஒரே மொழியைப் பேசினாலும் பல வகையான இன்னல்களை, சந்தேகங்களை, எங்களுக்கிடையிலே பிளவுகளை ஏற்படுத்தியதை நாங்கள் மறக்க முடியாது.
எனவே அரசியலுக்காக அல்லது அரசியல் இழுப்புக்காக இரண்டு சமூகங்களையும் தொடர்ந்து பிரித்து வைப்பதற்கு நாங்கள் யாரும் அனுமதிக்க முடியாது. எனவே அவ்வாறான இந்த ஒரே மொழியைப் பேசுகின்ற இரண்டு சமூகங்களும் இணைந்து வாழ வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு  எங்களுக்குள்ளே இருக்கின்ற சிறு சிறு விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதன் ஊடாக  நிம்மதியாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்து, இவ்வாறான நூல்களை வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல.

எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆற்றலுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு நூலை வெளியிடுவதென்பது பெரிய கஷ்டம். எனவே அவ்வாறான கஷ்டங்களை எல்லாம் தாண்டி ஒரு பெண்மணி ஒரு நூலை வெளியிட்டு வைப்பதை நாங்கள் பாராட்ட வேண்டும்.

எங்களுடைய சமூகத்திலே கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்துத்துறையிலே ஆற்றலுள்ளவர்கள் எத்தனையோ பேர். அதே போல் ஊடகத்துறையிலே மிலிர்ந்து இருக்கின்ற எத்தனையோ பேரை நாங்கள் பார்க்கின்ற போது அவர்களில் அதிகமானோருடைய நிலைமை பரிதாபகரமான நிலையாக இருக்கின்றது. காரணம் தேவைக்காகப் பயன்படுத்தி விட்டு தேவையில்லாத போது அவர்களைப் பற்றி சிந்திக்காத  அரசியல் வாதிகளுடைய செயல்மற்றும் பொருளாதார வளமுள்ளவர்கள் செய்கின்ற உதவி ஒத்துழைப்புகளைப் பார்க்கின்ற போது மிகவும் குறைவாக இருக்கின்றது.

இதனால் அவர்களுடைய ஆற்றலை வெளியே வெளிக் கொணர்வதற்கு, அதனிலும் இந்தத் துறையைச் செய்து கொண்டு, தமது குடும்ப நிலையைச் சமாளிப்பதற்கு அவர்கள் மிகவும் கஷ்டப்படும் ஒரு நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

எங்களுடைய சமுதாயத்திலே இருக்கின்ற தனவந்தர்களுக்கு ஒரு கடமைப்பாடு இருக்கின்றது. இவ்வாறான துறையிலே இருக்கின்றவர்களை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவி செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

இல்லை என்றால் காலப்போக்கில் இந்தத் துறையில் இருக்கின்றவர்கள் அருகிக் கொண்டு செல்லுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். இன்று வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற துறைகளாக இருக்கலாம் அல்லது சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் எல்லாத் துறைகளில் இருக்கின்றவர்களையும் ஊக்கப்படுத்தி வளர்த் தெடுக்க வேண்டிய ஆக்கபூர்வமான கட்டைப்புக்கு மற்றும் இந்தத் துறையை ஊக்கப்படுத்த, எங்களுடைய தனவந்த சமூகமும் இணைந்து செயலாற்றுவதற்குமுன்வர வேண்டும் என்று அன்பாக அழைப்பு விடுக்கின்றேன். என அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

அங்கு தலைமை வகித்து உரையாற்றிய  நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். எம். அமீன்  தனது உரையின் போது,

இலைமறைகாய்களாக உள்ள திறமைசாலிகளை வெளியுலகிற்குக் கொண்டு வர தனவந்தர்கள் உதவ வேண்டுமென அவர்  வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பு அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தின் எம்.சி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடக்கின்ற முதலாவது இலக்கிய விழா இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

கொழும்பிலே கூட்டங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடம் ஒன்று இல்லையே என்ற குறையை ஓரளவேனும் நீக்குவதற்குரிய ஒரு வசதியோடு இந்தக் கல்லூரியிலே கேட்போர் கூடம் அமைந்திருக்கின்றது. இதனை அமைத்துக் கொடுத்த அல் - ஹாஜ் பஹார்தீன் அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பிலும் எழுத்தாளர்கள் சார்பிலும் முதற் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடத்தினால், இந்த மண்டபத்தின் மூலம் கொழும்பு வாழ் முஸ்லிம்களுடைய கல்வி அபிவிருத்திக்குச் செய்கின்ற உதவியாக இது இருக்கும்.

இப்பொழுது கிராமப் புறங்களிலிருந்து எங்களுடைய சகோதரிகள் எழுத்துப் பங்களிப்பைச் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் நிலவுக்குள் சில ரணங்கள் என்ற இந்த சிறுகதைத் தொகுதியைத் தந்த கல்லொலுவ மினுவாங்கொட வஸீலா ஸாஹிரைப் பராட்டுகிறேன்.

கிராமப் புறங்களிலே இருக்கின்ற பெண் எழுத்தாளர்கள் தங்களுடைய நூல்களை வெளிக் கொணர்வதற்கு படுகின்ற துன்பத்தைப் போக்க ஏதாவது ஒரு அமைப்பு இருக்க வேண்டும். நாட்டிலே இருக்கின்ற பண வசதி படைத்த செல்வந்தர்கள் முன் வந்தால் நூற்றுக்கான எங்களுடைய சகோதரிகளுடைய திறமைகளை வெளிக் கொணர்ந்து சமூகத்துக்குப் பயன்படுத்தலாம். நாட்டுக்கும் பயன்படுத்தலாம்.

எத்தனையோ தனவந்தர்கள் இருந்தும் எங்களுடைய பாடசாலைகளிலே அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். குறிப்பாக கொழும்பிலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய கல்வி நிலை உங்களுக்குத் தெரியும். அப்படியான எங்களுக்கு  அரசாங்க உதவியும் சரியாகக் கிடைக்காத போது நாங்கள் எங்களுடைய சமூகத்தினுடைய ஒத்துழைப்பினால்தான் நாங்கள் இந்தளவுக்கு இருக்கின்றோம்.

இலை மறை காய்களாக இருக்கின்ற திறமையானவர்களது எண்ணங்களை, அவர்களது ஆற்றலை வெளி உலகத்துக்கு கொண்டு வருவதற்காக குறிப்பாக தனவந்தர்களுடைய உதவியை நாடி அவர்களை விழாவுக்காக அழைக்கின்றார்கள். எனவே அதற்காக தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வதற்கு தனவந்தர்கள் முன்வரவேண்டும்.

நூலை வெளியிடுகின்ற நூலாசிரியரை நாங்கள் ஊக்கப்படுத்துவதென்றால், அவர் வெளியிடும் நூலை நாங்கள்  வாங்க வேண்டும். அவ்வாறு வாங்குவதன் மூலமே அவருடைய கருத்துக்களை மேலும் மேலும் சமூகத்துக்குக் கொண்டு வர முடியும். என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.


விழாவில்  இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.சாஹிர்)
Wednesday, August 03, 2016 |
மேலும் »
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2