ஜனவரி 08 – 14 வரை நல்லிணக்க வாரம்
2018 ஜனவரி 08ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரையான ஒரு வாரகாலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன் கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி, வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புகளை ஊக்குவித்தல், மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை விருத்தி செய்தல், பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிப்படுத்தல் என்பனவாகும்.