A+ A-

காபூல் உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறையின் தலைமையகத்தின் சுற்றுச்சுவருக்கு இன்று (25) அருகே ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறையை சேர்ந்த பணியாளர்கள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது தாக்குதல்தாரி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

கடந்த சில மாதங்களாக ஆப்கனின் தலைநகரான காபூலை குறிவைத்து தாலிபன் மற்றும் பல தீவிரவாத குழுக்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. கடந்த மே மாதம் காபூலில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

திங்களன்று நடந்த இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.