150 பில்லியன் டொலர் செலவில் விண்வெளியில் ஹோட்டல்
சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு சர்வதேச விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஹோட்டலை நிர்மானிப்பதற்கு ரஷ்ய அரசும் தனியார் நிறுவனும் இணைந்து திட்டமிட்டுள்ளது.
பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து அதை உருவாக்கி வருகிறது.
அதற்காக இதுவரை 150 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஹோட்டலை கட்டுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அங்கு கட்டப்படும் ஹோட்டலில் 4 ஆடம்பர அறைகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொன்றும் 4 கன மீற்றர் அளவில் இருக்கும். இங்கு மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம் வை-பை வசதி போன்றன இருக்கும்.
இங்கு ரொக்கெட் மூலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக 46,830,000 டொலர் வசூலிக்கப்படும். அவர்கள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் தங்கலாம். அவர்கள் இங்கு மேலும் ஒரு மாதம் தங்கவும், விண்வெளியில் நடக்கவும் மேலதிகமாக 20,293,000 டொலர் வசூலிக்கப்படும். விண்வெளியில் நடக்க ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள்.