வாக்காளர் அட்டை ஜனவரி 19 முதல் விநியோகம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டை ஜனவரி 19ஆம் திகதி முதல் வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜனவரி 28ஆம் திகதி விசேட தினமாக பிரகடனப்படுத்தி, வாக்குரிமை அட்டை விநியோகம் இடம்பெறும் எனவும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 3ஆம் திகதிக்கு பின்னர் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படாது எனவும், வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் அஞ்சல் அலுவலகத்துக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் இறுதி தினம் பெப்ரவரி 2ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 7ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் தேர்தலுக்கான அனைத்து பிரசாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்