A+ A-

கலைக்கப்பட்ட கேட்டாலோனியா பாராளுமன்றத்திற்கு இன்று மறுதேர்தல்

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கேட்டாலோனியா தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது. இதற்கு 90% மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி கேட்டாலோனியா தனிநாடு பிரகடனம் செய்தது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதந்திர கேட்டாலோனியா பிறந்து விட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கேட்டாலோனியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும், கேட்டாலோனியா நிர்வாகம் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் ஸ்பெயின் அரசு அறிவித்தது.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு இன்று மறுதேர்தல் நடத்த முடிவெடுத்த ஸ்பெயின் அரசு, இந்த தேர்தலில் கேட்டாலோனியா தலைவர் பூட்சியமோண்ட் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, பிரிவினை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பூட்சியமோண்ட்டை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

பூட்சியமோண்ட் ஜெர்மனியில் தஞ்சமடைய அவர் மீது கைது நடவடிக்கை இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் நாடு திரும்பினார். இந்நிலையில், கேட்டாலோனியா பாராளுமன்றத்திற்கு இன்று மறுதேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பூட்சியமோண்டின் கட்சி போட்டியிட்டாலும், கேட்டாலோனியா இடது குடியரசு கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

பூட்சியமோண்டின் கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.