அமெரிக்காவினால் இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலம் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட 9 சிறிய நாடுகள் மாத்திரமே எதிர்த்து வாக்களித்துள்ளன.
தமக்கெதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா விடுத்த மிரட்டல்களையும் மீறி 128 நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐ.நா. உறுப்பு நாடுகளை அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்துள்ள நிலையில் தனது பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று செய்யித் ராத் அல்ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இப்பதவியில் அமர்வது ஏகாதிபத்தியத்தின் முன் முழந்தாழிடுவதாகிவிடும். அதற்கு நான் தயாரில்லை எனவும் தனது அலுவலக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் ஹுசைன்.