ராஜபக்ஸவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக இருந்தபோது, நடந்த மத்திய வங்கி பிணைமுறிகள் வினியோகம் தொdayanடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஒரு ஆணைக்குழுவை நியமிக்க விரும்புகிறார். உண்மையில் நல்லது மிகவும் சிறப்பானது. அவர் விசாரணையை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டிய ஒரு பெரிய விடயம் என்னிடம் உள்ளது. அது உயர் அரசாங்கப் பதவி வகிக்கும் தீவினைக்கு அஞ்சாத ஒரு கெட்ட மனிதரைப்பற்றியது அவர் ஒரு ஒற்றை நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களை மரணம், அங்கவீனம் மற்றும் துயரங்களில் இருந்து முன்கூட்டியே காப்பாற்றி இருக்கலாம் - அந்த நடவடிக்கையை அவர் செய்யவேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதற்கு அனுமதி அளித்து அல்லது தடுக்காமல் இருந்திருக்கலாம்.
ஒரு அப்பாவியான மனிதர் துன்பம் அனுபவிப்பதையும் மற்றும் கொடூர மரணம் அடைவதையும் தன்னால் தடுக்க முடிந்தபோதும் அப்படிச் செய்யாமல் தவறுபவர் எவரும் ஒரு குற்றவாளி மற்றும் தீமையான மனிதர். ஒரு நீண்ட இரத்தக்களரி இடம்பெறுவதையும் மற்றும் ஒரு அரக்கனால் அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர அல்லது அதைக் குறைக்கும்; தகுதி பெற்ற எவரும் அதைச்செய்யாமல் செயலிழக்க அனுமதிப்பதன் மூலம் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
இதோ அதற்கான சான்று மற்றும் இது சிங்களத் தேசியவாதிகளினதோ அல்லது ஒரு சிங்களவருடையதோ அல்ல ஆனால் உலகின் மதிப்பான இராணுவ அகாதமியான சான்ட்ஹர்ஸ்ட்டின் ஒரு முன்னாள் விரிவுரையாளருடையது.
“…..2001 டிசம்பர் 20ல் ஒரு வன்னிக்காட்டில் ஒரு சிறப்பு படைகள் பிரிவு நிறுத்தப்பட்டிருந்தது. ஒருமுறை அதனால் அடிக்கடி நழுவித் தப்பித்துக்கொள்ளும் புலிகளின் தலைவர் எங்கிருக்கிறார் என்பதை குறிப்பாக அறிய முடிந்தது. இந்தக் கொலைக்குழு நத்தார் தினத்தன்று தனது ஆட்டத்தை நடத்த தயாராக இருந்தது. பிரபாகரனின் மரணம் போரை முடிவுக்கு கொண்டுவந்துவிடும் என்கிற கடுமையான புலனாய்வு விவாதங்களுக்கு மாறாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டபோது அந்தக் குழுவின் தலைவர்கள் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பொத்தானை அழுத்த தயாராக இருந்தார்கள்.
விசேட படைகளின் செயற்பாட்டாளர்கள் தற்காலிகமாக கொழும்பிலுள்ள ஒரு பாதுகாப்பான மறைவிடத்தில் தங்கியிருந்தார்கள். யுத்தத்தில் உளவுத்துறையினரின் சொந்த இலக்குகளில் மிகப் பெரிய ஒன்று, அந்த வீடு கண்டியில் உள்ள விசேட பிரிவு பொலிசாரினால் சோதனைக்குள்ளானது. இதனால் மிகவும் இரகசியமான நடவடிக்கை வெளியே தெரிந்தது. இது துப்பறிவாளர்களின் அளவுக்குமீறிய ஆர்வத்தின் காரணமான விடயம் அல்ல….இராணுவ மற்றும் தேசிய புலானய்வுத் தலைவர்களையும் மீறி பொலிசார் அந்த செயற்பாட்டாளர்களைக் கைது செய்து கண்டி சிறையில் அடைத்தார்கள். இரண்டு வாரங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலிகடாவாக்கப்பட்டவர் நடுத்தர பதவி வகிக்கும் ஒரு பொலிஸ் அதிகாரி, அவர் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இது அத்துடன் முடிவடையவில்லை: புலனாய்வு தலைவர்கள் பிரதமரைக் கொலை செய்வதற்காக அந்த பாதுகாப்பான மறைவிடத்தைப் பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. மீண்டும் ஒருமுறை புலித்தலைவர் சிறிதும் பாதிப்பில்லாமல் தப்பினார்.
-போல் மூர்கிராப்ட் “தமிழ்புலிகளின் மொத்தமான அழிவு: ஸ்ரீலங்காவின் நீண்ட போருக்கு கிடைத்த அரிதான வெற்றி” பென் அன்ட் சுவோர்ட் மிலிட்டரி, யு.கே, 2012 பக்கங்கள் 38 - 39.
பேராசிரியர் மூர்கிராப்ட் மிகவும் சுவராஸ்யமான பல விஷயங்களைக் கொண்டிருக்கிறார், இவர் சான்டஹஸ்ட் றோயல் இராணுவ அகாதமியின் முன்னாள் மூத்த பயிற்றுவிப்பாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கூட்டு சேவைகள் கட்டளையதிகாரி மற்றும் கல்லூரி ஊழியரும் ஆவார்.
இந்த ஆதாரத்தை சான்ட்ஹஸ்ட்டின் முன்னாள் மாணவரின் சாட்சியத்தை வலுப்படுத்தும் ஒரு ஆதாரத்தின் பின்னணியாகப் பார்க்க வேண்டும், தனது சக அதிகாரியான டென்சில் கொப்பேகடுவ உட்பட வெளிநாட்டு மாணவர்கள் தொகுதியில் முதலிடத்தை பெற்றவர் அந்த மாணவர். அவர்தான் 1995ல் யாழ்ப்பாணத்தை மீட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் கெரி டீ சில்வா, மற்றும் 1987ல் வடமராட்சி நடவடிக்கையின்போது ஒட்டுமொத்த படைத் தளபதியாகப் பணியாற்றியவர் இவருடன் பிரிகேடியர்கள் கொப்பேகடுவ மற்றும் விஜய விமலரத்ன ஆகிய இரண்டு திறமைசாலிகளும் இணைந்திருந்தார்கள். ஜெனரல் சரத் பொன்செகாவின் பாத்திரத்துக்கும் மற்றும் அவரது உத்மமான பங்களிப்புக்கும் தாராளமாக பாராட்டுக்களை வழங்கும் அதேவேளை, ஜெனரல் கெரி டீ சில்வா (முன்னாள் ஜோசப்பியன் மற்றும் ஒரு அரிதான சிங்கள பௌத்த வெற்றி வீரர்) தனது வரலாற்றுச் சாதனைகளை முற்றிலும் நேர்மையாக இங்கே பகிருகிறார்.
“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ ஆகிய இருவருமே இராணுவ வெற்றிக்குப் பின்னால் இருந்தவர்கள். இராணுவத்தின் மனிதவள சக்தியை அதிகரித்தல் (இராணுவத்தில் மட்டும் சுமார் 300,000 பேர்கள், கடற்படை மற்றும் வான்படை என்பனவற்றிலும் குறிப்பிட்டளவு அதிகரிப்பு), இராணுவ ஆயுத விநியோகம் மற்றும் தொடர்பாடல்கள், கடற்படை மற்றும் வான்படையினருக்கும் முறையே கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன உட்பட சகலதையும் வழங்கி யுத்தத்தை முன்னெடுத்தவர்கள். பற்றாக்குறையான பலம் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருந்துள்ளது. நான் இராணுவத்திற்கு கட்டளையிடும்போது, அதன்பலம் 120,000 ஆக இருந்தது, வடக்கிலும் கிழக்கிலும் ஒரே நேரத்தில் போராடுவதற்கு இது சாத்தியமாக இருக்கவில்லை. அநேகமாக இந்த பிரச்சாரம் மற்றும் யுத்தம் ஏன் இவ்வளவு காலம் நீண்டு நின்றது என்பதற்கு அநேகமாக இதுதான் காரணம்.
நாங்கள் மனித வள வலுவும் போர்த்தளபாட வினியோகங்களையும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின்போதுதான் பெற்றுக்கொண்டோம், ஏனென்றால் கோட்டபாய ராஜபக்ஸவுக்கு போர் நடவடிக்கைகள் பற்றிய அனுபவம் இருந்தது (வடமராட்சி நடவடிக்கையின் ஒரு பகுதி). போரை முடிப்பதற்கு என்ன அவசியம் (மட்டும் என்ன குறைபாடு) என்பதைப்பற்றியும் மற்றும் எங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய அளவிலான சிகிச்சைகள் பற்றிய அறிவும் அவருக்கு இருந்தது.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக வந்தபோது அவரிடம் நாங்கள் எடுத்தரைத்திருந்தோம். பின்னர் அவர் பிபிசியிடம் நாங்கள் யுத்த வெறியாகள் எனச் சொல்லியிருந்தார். மற்றும் சமாதானம் என்கிற ஒரு மேடைக்கும் அவர் வந்திருந்தார், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.எல்.ரீ.ரீ.ஈ தனது அதே அமைப்பை கிளிநொச்சியில் நடத்தியது. நீங்கள் எங்களை யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்காவிட்டால் குறைந்தபட்சம் கிளிநொச்சிiயாயவது எடுக்க அனுமதியுங்கள் ஏனென்றால் எங்கள் துருப்புகள் ஆனையிறவில் உள்ளார்கள், மேலும் ஒருவர் எல்.ரீ.ரீ.ஈ உடன் பேச்சு வார்த்தை நடத்தும்போது கிளிநொச்சி நம்வசம் இருப்பது ஒரு நல்ல பேரம்பேசலுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் அவரிடம் கேட்டுக்கொண்டோம். “அடுத்த வாரம் இதபற்றி நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்” என அவர் எங்களிடம் சொன்னார், மற்றும் அவர் திரும்பவும் எங்களிடம் வந்து “மன்னியுங்கள்’ என்று சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈ இனது மிகப்பெரிய பலவீனமாக இருந்தது எங்களது ஆழ ஊடுருவும் ரோந்துப் படைப் பிரிவினரது (டிபிபி) பணி. அதை அவர்கள்; தொலைதூர வேவுப்பணி என அழைத்தார்கள், அது ஒரு தவறான காரணியாக உள்ளது, ஏனென்றால் உளவுபார்க்கும் துருப்புகள் போராடுவதில்லை. இவர்கள் இரகசியமாக எதிரிகளின் வரிகளுக்குப் பின்னால் சென்று ஏராளமான எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைக் கொன்றுள்ளார்கள். அப்படியான நிலையில் எல்.ரீ.ரீ.ஈ இனர் வெளியே வருவதற்கு மிகவும் பயந்தார்கள், ‘நாங்கள் வெளியே வரப்போவதில்லை என அவர்கள் சொன்னார்கள். பின்னர் விக்கிரமசிங்காவினால் கையொப்பமிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002ல் வந்தது. விக்கிரமசிங்கா இந்த விடயத்தை இராணுவத்திடம் தெரிவிக்கவோ அல்லது எங்களுக்கு அறிவிக்கவோ இல்லை. குமாரதுங்க கூட இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் இருட்டில் விடப்பட்டோம். இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்த ஒரு விதியின்படி நாங்கள் ஆழ ஊடுருவித்தாக்கும் படைப்பிரிவை நிறுத்த வேண்டியிருந்தது….
இந்த யுத்தக்குற்றங்கள் பற்றிய கோட்பாடுகளைப் பரப்பும் அமெரிக்காவைப் போன்ற மேற்கத்தைய சக்திகள்தான் அதிக அளவிலான யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. (2017 டிசம்பர் 6ல் சிலோன் ருடேக்காக ருவான் லக்நாத் ஜெயக்கொடி நடத்திய ஒரு கேர்காணலில்).
ஒரு அரக்கனால் மேற்கொள்ளப்படும் ஒரு நீண்ட வெறியாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருபவர் அல்லது அதைக் குறைக்கின்ற எந்த ஒருவரும் உலகளாவிய விதிமுறைகளின்படியும் மற்றும் எந்தஒரு பாரம்பரிய இலக்கியத்தின்படியும் ஒரு ஹீரோவாகப் போற்றப்படுகிறார். இன்னமும் நாங்கள் எங்கள் மத்தியில் தீய ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டுள்ளோம், துன்பங்களை தடுக்கக்கூடிய அதிகாரம் தங்களிடம் இருந்தபோதும் அதைத் தடுக்காதவர்கள்தான் இந்த ஆண்கள் மற்றும் பெண்கள். மற்றும் எங்கள் மத்தியில் இன்னமும் அதைத் தடுத்த மனிதர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் இன்னமும் ஹீரோக்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை எப்படி நடத்துகிறோம்? யாரை நாங்கள் வெகுமதிக்கு தேர்வு செய்யப் போகிறோம்.
வாசகர்களுக்கு நான் ஒரு உதாரணத்தை தர விரும்புகிறேன்.எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களின் நிதியமைச்சராக இருந்தவர் மூக்குக்கண்ணாடி அணிந்த உயர்ந்த மனிதரான ஸ்ரான்லி டீ சொய்சா, அவரது மகள் றோமா ஒரு மறக்கமுடியாத மற்றும் கட்டுப்படுத்த முடியாத தனித்தன்மை வாய்ந்தவர், தனது 20 வயதில் டீ சொய்சாவின் செயலாளராக இருந்தார். ரிச்சட் டீ சொய்சா மற்றும் பேராசிரியை குமாரி ஜெயவர்தனா ஆகியோர் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள். 1956ல் தனது பதின்ம வயதுகளைக் கடந்த ஆண்ட்டி றோமா, எஸ்.டபிள்யு.ஆர்.டி யின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் ஒருவரான பென்னி ஜினதாஸவைத் திருமணம் செய்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவன காலத்திய கையெழுத்துப் பிரதி ஆவணங்களை அவர் இன்னமும் தன்வசம் வைத்துள்ளார், அதன் நிறுவனர்களில் அவரது தந்தையும் ஒருவர், சொலமன் மாமாவும் அதை நிறுவுவதில் அவரது தந்தையுடன் இணைந்து பணியாற்றினார்.
இன்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக போதுமானவரை லொஸ் ஏன்ஞல்சில் வசித்துவரும் அவர், தனது 80வது பிறந்தநாளை கொழும்பிலுள்ள 80வது கழகத்தில் கொண்டாடினார், மற்றும் அவரது பிறந்தநாள் பேச்சின்போது முதலில் எனது தந்தை மேர்வினின் பெயரை மரியாதையுடன் நினைவுகூர்ந்தார். அதன்பின்புதான் தனது சொந்தத் தந்தையைக் குறிப்பிட்டார். இந்த இரண்டு பேர்களும் அவரது வாழ்க்ககையில் மிகவும் முக்கியமான செல்வாக்குச் செலுத்தியவர்கள் ஆவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தது எனக்குத் தெரியும். கலிபோர்ணியாவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக றோமா ஆண்ட்டியினால் வழக்கமாக என்னுடன் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள சாத்தியப்படவில்லை. தன்னைப்பற்றி மேற்கோள் காட்டுவதற்கு அவர் எனக்கு எழுத்துமூல அனுமதி வழங்கியுள்ளார்.
1956ல் இருந்த இளம் மகிந்த உட்பட ராஜபக்ஸக்களை அவர் தத்ரூபமாக நினைவு கூருவார். மற்றும் கலிபோர்ணியாவில் உள்ள ஸ்ரீலங்கா அறக்கட்டளை மூலமாக (அவர் அதன் நிறுவனத் தலைவராக இருந்துள்ளார்) கோட்டாவை அவர் நன்கு அறிவார்.எந்த கொழும்பு சமூக நிகழ்வுகளிலாவது யாராவது ராஜபக்ஸக்களைப் பற்றி ஏதாவத கடுமையாகக் கூற முற்பட்டால் போதும் உடனே ஆண்ட்டி றோமா விரைவாகவும் அழகாகவும் அதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்துவிடுவார். “ நான் எப்போதும் மகிந்தவுக்கு கடன் பட்டுள்ளேன் மற்றும் நாங்கள் எல்லோருமே எப்போதும் மகிந்தவுக்கு கடன்பட்டுள்ளோம். அவரினால்தான் எனது இரண்டு பேத்திகளாலும் இப்போது இந்த நகரத்தையும் மற்றும் இந்த நாட்டையும் குண்டு வெடிப்புக்கு ஆளாகாமல் சுற்றிவர முடிகிறது. 25 வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈ யின் குண்டுகளால் வெடித்துச் சிதறிவிடுவென் என்கிற பயத்துடன் நான் வாழ்ந்துள்ளேனே;. இப்போது அந்த அச்சத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன்”. லொஜ் ஏஞ்சல்ஸில் இருந்து எனக்கு வரும் அவரது தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளில் கேட்கப்படும் கேள்வி;: “இந்த ஆட்கள் கோட்டாவுக்கு என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?’ என்பதுதான். ஆண்ட்டி றோமா டொனால்ட் ட்ரம்ப் மீது வெறுப்பு கொண்டுள்ளார் மற்றும் அவர் ஹிலாரி கிளின்டன் சார்பானவர், எனவே கோட்டபாயா பற்றிய அவரது நிலைப்பாடு மிகவம் சுவராசியமானது.
அவரது உடல்நிலையுடன் அநேக போராட்டங்களை நடத்திவந்தாலும் அவரது சமீபத்தைய தொடர்ச்சியான பல்லவி” நான் சாவதற்கு முன்பு கோட்டபாய ஜனாதிபதியாவதைக் காணவேண்டும் என்பதே எனது விருப்பம். நான் திரும்பி வந்து அவருக்காகப் பிரச்சாரம் செய்வேன் ஆனால் அதற்கிடையில் இங்கிருந்தபடியே அவருக்காக என்ன செய்யலாம்? நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.
ஒருவேளை ஆண்ட்டி ரோமா போன்ற வளமான மற்றும் மிருதுவான குணமுடையவர்கள், சமூக சந்தர்ப்பவாதம் மற்றும் சுயநலத்தையும் தவிர்ப்பதற்காக, செலுத்தவேண்டிய நன்றிக்கடனை நினைவில் வைத்து சரியான காரணங்களுக்காக சரியான நன்னெறி- தார்மீக அல்லது விரக்தியற்ற தெரிவை மேற்கொள்கிறார்கள்.
ஹீரோக்களை அகற்றி மற்றும் அவர்களைக் கொடுமைப்படுத்தும் எந்த வகையான ஒரு நிலத்தில் நாம் வாழ்கிறோம், அதேவேளை பொறுப்பற்ற நியாயமற்ற தீய ஆண்களை; மற்றும் பெண்களை அதிகாரத்தில் மேலுயுயர்த்துகிறோம்? எந்த வகையான மக்கள் அதைச் செய்வார்கள்? கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களிடமே கேளுங்கள் “இந்த தேர்தலில் எந்த வகையான சமிக்ஞையை நான் கொடுக்க வரும்புகிறேன், அது என்ன முன்மாதிரியை கொடுக்கிறது, மற்றும் அது என்னைப்பற்றிய என்ன செய்தியை அனுப்புகிறது?
✍ தயான் ஜயதிலக