A+ A-

க.பொ.த. சாதாரணதர பரீட்சை கணித பாட வினாத்தாளில் திருத்தம்


அண்மையில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் கணித பாட பரீட்சை வினாத்தாளில், ஒரு சில கேள்விகளுக்கான புள்ளி வழங்குவதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கணித பாட வினாத்தாளுக்கு விடையளிக்கும்போது, மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக, பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கருத்து  தெரிவித்திருந்தன. குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரிடம், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

இதற்கமைய கணித வினாத்தாளை தயாரித்த பரீட்சை பரிசோதகர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனப்படையில், கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் புள்ளிகள் வழங்கும் விதிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.