A+ A-

வேட்பாளர்கள் வீட்டுக்கு வீடு செல்வதில் கட்டுப்பாடு


தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது வேட்பாளர்கள் வாக்கு கேட்டு, வீடு வீடாக செல்வது தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வாக்கு கேட்டு வீடுகளுக்குச் செல்லும்போது வேட்பாளருடன் செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது