உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பில் வாக்களருக்கான பெயர் இடம்பெறாதோர் வாக்களிக்க முடியாதென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் தொழில் நிமிர்த்தம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் முன்னர் பதிவு மேற்கொண்டிருந்த வாக்காளர் இடாப்பில் போன்றே இம்முறை வாக்களர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்ள பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்காலிகமாக வாடகை வீடுகளில் இவர்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாடகை வீடுகளின் முகவரியின் அடிப்படையில் இம்முறை வாக்காளர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்வதற்கு வாடகை வீட்டு உரிமையாளர்கள் இடமளிக்காமையினால் பதிவுகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இதனால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியிலில் இவர்களின் பெயரப்பதிவு இடம்பெறவில்லை.
இவ்வாறானோர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக கேட்டபோதே மேலதிக ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.