A+ A-

வீடு திரும்பினார் சம்பந்தன்: சுகம்விசாரித்தனர் மகிந்த, நாமல்


சுகயீனம் காரணமாக கடந்த வியாழக்கிழமை கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி சிகிச்சை பெற்றுவந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சை முடிவடைந்து இன்று (25) வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு சம்பந்தனிடம் சுகம்விசாரித்த மகிந்த, அவருடன் சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.