A+ A-

பிரசவத்துக்கு வந்து வைத்தியசாலையில் பரீட்சை எழுதிய மாணவி


பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு வந்த பெண்ணொருவர் அங்கிருந்தவாறே பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

அமெரிக்காவில் கான்சாஸ் நகரிலுள்ள கல்லூரியில் படித்து வருபவர் நஸியா தோமஸ். இவர் கர்ப்பமடைந்த நிலையில் கல்லூரிக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவரது பிரசவ திகதியும் கல்லூரியில் இறுதிப் பரீட்சையும் ஒன்றாக வந்துள்ளன.

இந்நிலையில், பரீட்சை எழுதாதுவிட்டால் படிப்பு வீணாகிவிடும் என்ற காரணத்தால் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பரீட்சை எழுதியுள்ளார். அதுவும் தனது மடிக்கணனி மூலம் உளவியல் பரீட்சை எழுதியுள்ளார்.

பரீட்சை எழுதியவுடன் பிரசவத்துக்கு தயாரான நஸியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் பரீட்சை எழுதுவதை அவரது தாய் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த படத்துக்கு இலட்சக்கணக்கானோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்.