வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ் சேவையை நடத்த வேண்டுமென முதலமைச்சரின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை திங்கட்கிழமை 1ஆம் திகதி தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வடமாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் 30க்கு மேற்பட்ட தொழிற்சங்களை ஒன்றிணைத்து இப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறும் என்பதுபற்றி இன்று கூறிமுடியாதுள்ளதாகவும் நாளையே முடிவு தெரியும் என போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.