A+ A-

பொதுஜன பெரமுனவில் இணையும் 20 கட்சிகள்


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஒன்றிணைந்த கட்சியை சேர்ந்த 20 கட்சிகள், எதிர்வரும் 28ஆம் திகதி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சத்திடுவதற்கு தீர்மானித்துள்ளன.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூடி இது தொடர்பாக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தரமுல்லையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அலுவலகத்தின் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் அதற்கு முன்னர் போட்டியிடும் சகல கட்சிகளும் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கும் அதனை தொடர்ந்து வேட்பாளர்களிடம் சத்தியப்பிரமானங்களை பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டு கூட்டங்களை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.