A+ A-

2017 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின


2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk எனும் இணையத்தளத்தில் இதனை பார்வையிடலாம்.

2017 ஓகஸ்ட் 08 முதல் செப்டெம்பர் 02 வரை நடைபெற்ற உயர்தர பரீட்சை நாடு முழுவதிலுமுள்ள 2,230 மத்திய நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 3 இலட்சத்து 15,227 பேர் தோற்றியிருந்தனர்.

2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனைக்காக ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 205 மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.