A+ A-

23ஆம் திகதி யாழில் தேசிய மீலாத் விழா: பிரதம அதிதியாக ஜனாதிபதி

தேசிய மீலாத் விழா எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்.

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு யாழ். ஒஸ்மானியா கல்லூரி செப்பனிடப்பட்டு, அழகுபடுத்தப்படுவதுடன் நிகழ்வுக்கான பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீமின் அழைப்பின்பேரில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.