A+ A-

தபால்மூல வாக்களிப்பு ஜனவரி 25 – 26


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால்மூல வாக்களிப்புகளை ஜனவரி 25 – 26 வரையில் நடாத்துவதற்கு ஆலோசித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவை பரிசீலிக்கப்பட்ட பின்னர் முறையான ஆவணம் தயாரிக்கப்பட்டு, ஜனவரி 25 – 26 வரயைில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறும்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 24 முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.