A+ A-

விசேட புகையிர சேவை ஜனவரி 7 வரை நீடிப்பு


புகையிரத திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட புகையிர சேவை புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 7ஆம் திகதி வரை நீடிக்குமென புகையிர கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

பாடசாலை விடுமறை முடிவுக்குவந்த போதிலும் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்வோர் மீண்டும் கொழும்பு வரும்போது இந்த சேவை பயன்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக பதுளை பண்டாரவளை பிரதேசங்களுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் நலன்கருதி இந்த புகையிரத சேவை இடம்பெறும்.

தேவையேற்படும் பட்சத்தில் பயணிகளின் வசதிகள் கருதி மேலதிக புகையிர  சேவைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கு தேவையான பஸ்களை ஈடுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.