A+ A-

80% போலி பேஸ்புக் கணக்குகள் 2017 இறுதிக்குள் முடக்கம்


இலங்கையிலுள்ள 80% போலியான பேஸ்புக் கணக்குகள் இந்த வருட இறுதிக்குள் முடக்கவுள்ளதாக கணனி அவசர பதிலளிக்கும் பிரிவு அறிவித்துள்ளது. மோசடிகள், அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய முகநூல் கணக்குகள் பல முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரையில் 3,400 பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், உண்மையான கணக்கு உரிமையாளர்கள் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய போலியான கணக்குகள் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 3000 இலங்கையர்களின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி கணக்குகளை வைத்திருத்தல், பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.