162 பயணிகளுடன் விமான விபத்து... துருக்கியில் தரை இறங்கும் போது அசம்பாவிதம்.
துருக்கி வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய வானூர்தியொன்று வானூர்தி ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
துருக்கி - அங்காராவில் இருந்து ட்ரப்சன் நகரை நோக்கி பயணித்த வானூர்தி, ட்ரப்சன் நகர வானூர்தித் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, வானூர்தி விபத்தை எதிர்நோக்கியுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது வானூர்தியில் 162 பயணிகளும், 2 விமானிகளும், 4 பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.
ட்ரப்சன் வானூர்தித் தளத்தில் தரையிறக்கப்பட்டபோது மழையுடனான காலநிலை நிலவியதனால் வானூர்தி கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக துருக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.