A+ A-

உலங்கு வானூர்திகள் மூலம் அம்பியூலன்ஸ் சேவை


1990 என்ற அவசர நோயாளர் அம்பியூலன்ஸ் சேவையை எதிர்காலத்தில் வான் வழியாக மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சேவையின், இரண்டாம் கட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றபோது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தரையில் முன்னெடுக்கப்படும் அவசர அனர்த்த சேவையைப் போன்று வான்வழி சேவையை முன்னெடுக்க 6 உலங்கு வானூர்திகளும் மற்றும் 24 அவசர சேவை வாகனங்களும் கொண்டுவரப்படவுள்ளன.

இதேவேளை, மேலும் ஆயிரத்து 523 நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டிகள் கொண்டுவரப்பட இருந்தபோதும், அவை நிறுத்தப்பட்டன. ஏனெனில், சுவசெரிய நோயாளர் அம்பியூலன்ஸ் சேவையுடன் இதனை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.