A+ A-

ராஜகிரிய மேம்பாலம் 8ஆம் திகதி ஜனாதிபதியினால் திறப்பு


ராஜகிரிய மேம்பாலம் 8ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்புக்குள் நுழையும் வாகனங்களின் போக்குவரத்தைச் சீர்செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மேம்பாலம், எதிர்வரும் திங்கட்கிழமை 8ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நான்கு வாகன ஓடுபாதைகளைக் கொண்டுள்ள இப்இப்பாலம், 534 மீற்றர் நீளமுடையது என்பதுடன், 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் கொண்டுள்ளது.

ஸ்பெயின் நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்துக்கான மொத்த செலவு, 4,700 மில்லியன் ரூபாவாகும்.