A+ A-

அமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதி கொங்கிறீற்று வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.







காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதியானது கொங்கிறீற்று வீதியாக செப்பணிடுதுவதற்கான பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,காத்தான்குடி நகரபையின் முன்னாள் தவிசாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்கள் இவ்வீதி அபிவிருத்தி பணிக்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இவ்வீதி அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் உற்பட முக்கியஸ்தர்கள், அவ்வீதியிலுள்ள பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(ஆதிப் அஹமட்)