A+ A-

யார் இந்த எம்.எஸ்.தௌபீக் ?

கிண்ணியாப் பிரதேசம் பல குறைபாடுகள் கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். ஆனால் நீங்கள் நினைப்பதைப் போல எந்த வித அரசியல் அதிகாரமும் அற்ற பிரதேசமும் அல்ல கடந்த 69 வருடகால அரசியல் அதிகாரத்தைக் கொண்ட இப்பிரதேசம் எம்.ஸ்.தெளபீக் எனும் தனிநபர் தனது சகோதரனின் 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அகால மரணமானதைத் தொடர்ந்து இறைவனின் வலிந்திழுப்பால் அவனின் நாட்டத்தால் அரசியல் அரங்குக்கு கொண்டுவரப்பட்டாலும் ஆரம்பத்தில் அரசியலில் சீரோ அறிவையே பெற்றிருந்தாலும் நேர்மையும், தன்நம்பிக்கையும் அதிகம் கொண்டிருந்தார் .

அக்காலத்தில் அரசியல் ஜாம்பவானாக இருந்த பல அரசியல்வாதிகள் இவரை விடவும் பல்மடங்கு அரசியல் அனுபவமும், பரம்பரை பின்னனியும் ,பெரிய செல்வந்தராகவும், வாரிசுரிமை அரசியல்வாதியாகவும் இருந்ததனால் அவர்களை விடவும் வயதிலும் அரசியல் முதிர்ச்சியிலும் சிறியவராகக் காணப்பட்ட தெளபீக் அரசியலில் காணாமல் போவார் என அணைவரும் கணித்து நின்றனர். அங்குதான் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது என்பது கிண்ணியாப் பாலத்தின் காரணகார்த்தாவாக மிளிர்ந்த போதுதான் மூக்கின் மேல் விரல் வைத்து மக்கள் வியந்தும் ஜாம்பவான்கள் வாயடைத்தும் போனார்கள் .

மேலும் இவரின் பணிவு, அரசியல் அனுகுமுறை என்பன மக்களை கவரவும் இவரின் சேவைகள் பாலமாகவும், பல மாடிக்கட்டிடமாகவும் ,கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் கார்பெட் வீதிகளாகவும் பிரதேச வேறுபாடின்றி மைதானம், உட்கட்டமைப்பு வசதிகள்,மின்சார வசதி ,பல புதிய பாடசாலை உருவாக்கம் ,தபாலகங்கள்,புகையிரத நிலையம் என நீண்டு கொண்டே போனதால் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் இவருக்கான வாக்கு வாக்கு வங்கி மட்டும் நேர் பெறுமானத்தில் ஏறிப்போனதால் பழைய அரசியல் ஜாம்பவான்களும், புதிதாக அரசியலில் கால் பதிக்க நினைத்தவர்களினதும் மற்றும் அவர்தம் ஆதரவாளர்களினதும் ஒற்றை இலக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்  மாறிப் போனார் .

எனவே தாங்கள் அரசியலில் நிலைக்க வேண்டுமானால் மாவட்டத்தின் பட்டிதொட்டியெல்லாம் தனது சேவையால் அகலக் கால் விறித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகை வீழ்த்த வேண்டும் அதற்கு தேர்ந்தெடுத்த ஆயுதம்தான் ஊழல் குற்றச்சாட்டும் வேலையெல்லாம் விற்றதான போலிக் குற்றச்சாட்டுக்களை எங்கும் பரப்பி மக்களை முட்டாளாக்கி நஜீப் ஏ மஜீதுக்குப் பிறகு அதிக வேலையினையும் மறைந்த மர்ஹும்களான மஃரூப், மஜீதிற்கு பிறகு அதிக அபிவிருத்தி செய்த உன்னத தலைவனை கடந்தமுறை சதி செய்தும் தோற்கடித்தனர்.

ஆனாலும் சதிகாரர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனான அல்லாஹ் ஈற்றில் தேசியப்பட்டியல் பா.உறுப்பினராக மாற்றி இன்னும் உத்வேகத்தோடு மகாவலிகங்கை திசை திருப்பல் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று விவசாயத்தில் புரட்சிக்கு வித்திட்டு ;2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்கலைக்கழக கல்லூரிக்கு 640 மில்லியனை நேரடியாக பெயர் குறிப்பிட்டுக் கூறி ஒதுக்கச் செய்து கல்விக்கு ஒளியூற்றி; தற்போது மீனவர் பக்கம் பார்வை திசை திருப்பியிருக்கும் MST மீது வைத்தியசாலையில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்கு அவர் மட்டும்தான் பொறுப்புதாரியைப் போலும் மற்றை பா.உ களான நாட்டின் அணைத்து அமைச்சையும் தன் வசம் கொண்ட கட்சியின் பிரதிநிதியும் அபிவிருத்திக்கு நாங்கள்தான் முன்னோடி என கொக்கரிக்கும் அமைச்சரின் பிரதிநிதியும் கதிரையை சூடாக்க சென்றவர்கள் போலும் சமூகத்தில் எந்த நன்மதிப்புமில்லாத முகநூல் வீரர்களால் தேர்தல் காலத்தில் மட்டும் இலக்கு வைத்து தாக்கும் சமூகப் புரட்சியாலளர்களை அதன் பின்னரான இன்னுமொரு தேர்தல் இடைவெளில் காணக் கிடைப்பதில்லை ஏனோ தெரியவில்லை? ஒரு வேளை தேர்தல் முடிந்தால் பிரச்சினை தூர்ந்து மீண்டும் தேர்தல் காலங்களில் முளைக்கிறதோ தெறியாது?இதற்கெல்லாம் வாக்காளனான நீங்கள் இம்முறை பெப்ரவரி 10ஆம் திகதி முடிவு கட்டி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் கரங்களில் அனைத்து முஸ்லிம் சபைகளையும் ஒப்படைத்து அபிவிருத்திக்கு உறமிடுங்கள்.

அகமட் சிப்ராஸ்
கிண்ணியா.