A+ A-

மு.கா. தேசியப்பட்டியல் எம்.பி. எம்.எச்.எம்.சல்மான் இராஜினாமா.





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்த கடிதத்தை பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்கவிடம் நேற்று கையளித்தார்.

இராஜினாமா செய்த சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மானின் வெற்றிடத்திற்கு மிகவிரைவில் புதிய ஒருவரை நியமிக்க கட்சியின் தலைமைபீடம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டு தேசியப் பட்டியல்களைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோர் பாராளுமன்றம் சென்றிருந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தனது பதவியை (அமானிதத்தை) இராஜினாமா செய்தார். இவ்விடத்திற்கு கட்சியின் தலைமைத்துவத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியுற்ற எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டார்.