A+ A-

பல்கலைக்கழக வேலை நிறுத்தம்.





இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் 2018.01.25 - வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஒன்றிணைந்த பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தில் நேற்று (22.01.2018) இல் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் பல்கலைக்கழக ஊழியர்களின் கொடுப்பனவு மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும் பொருத்தமான தீர்வுகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் பாரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அடையாள பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் T. சிறிதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018.01.17ம் திகதி கல்விசாரா பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

M.I.Sarjoon