சீன எக்ஸிம் வங்கியின் 8,356 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரும், பூஜாப்பிட்டிய பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான பாரிய நீர்த்தாங்கி அமைப்பதற்கான பெயர் பலைகையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (19) திரை நீக்கம் செய்து வைத்தார்.
இதன்போது இத்திட்டத்தை செயற்படுத்தும் சீன எக்ஸினம் வங்கியன் அதிகாரிகளும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளும் பிரசன்னமாகி திட்டம் தொடர்பாக விளக்கமளித்தனர். 2 வருடங்களில் பூர்த்தியடையும் இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 474,000 பேர் பயனடையவுள்ளனர்.