A+ A-

ஒரு பிரதேச சபையாக இருந்த இந்த சபையை நகர சபையாக்கி ஒரே இரவில் மாநகர சபையாக்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடமுடியாது: மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு





இந்த மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செய்தி என்பது சகோதர தமிழ் மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய விதமாக அவர்களுடைய அபிலாiஷகளுக்கு குறுக்கே நிற்காத ஒரு தீர்வைப் பற்றித்தான் நாங்கள் தொடர்ந்து சிந்தித்தித்தும் செயலாற்றியும் வந்திருக்கின்றோம். இந்த கல்முனை மாநகர சபைத் தேர்தல் முடிவு பல நிரந்தரமான தீர்வுகளை எங்களுக்கு கொண்டு வந்து தரும். குறிப்பாக இந்த வட்டாரத் தேர்தலும், கலப்புத் தேர்தலும் ஒன்றாக இருக்கின்ற புதிய தேர்தல் முறையின் கீழ் எவ்வாறு  இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட போகின்றது என்பது குறித்த யதார்த்தமான ஒரு விடையை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சொல்லப் போகின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை (25) இரவு நற்பிட்டிமுனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

மு.கா. தலைவர் அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும்; உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் அம்பாறை மாவட்டத்தில் அனைத்து அரசியல் பொறுப்புகளும் எங்களுடைய கைகளில் இருக்கின்ற தருணத்தில் இந்தத் தேர்தல் வந்திருக்கின்றது. அத்துடன், வேறு மாற்றுக் கட்சிகள் எவையும் அரசியல் அந்தஸ்தில் இல்லாத ஒரு நிலையில் நடக்கின்ற தேர்தல் என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மண்ணில் அபிவிருத்தியைச் செய்வதற்கு முன்னைய ஆட்சியில் அருகதையற்றவர்காளாக எங்களை வெறும் பார்வையாளராக வைத்துக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் அதில் ஒட்டியிருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இருந்த காலங்களில் இந்த கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அடையாளத்திற்காக அமைச்சர்களாகவும், அரசில் ஓர் அங்கமாகவும் இருந்தபோது பெரிய அபிவிருத்தி எதையும் செய்ய முடியாவிட்டாலும் எங்களுடைய இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதிலிருந்த அந்த ஆர்வமும், வீரியமும் இந்த கட்சியை தொடர்ந்து கல்முனை மாநகர சபை ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு வந்திருக்கின்றது.

ஒரு பிரதேச சபையாக இருந்த இந்த சபையை நகர சபையாக்கி ஒரே இரவில் மாநகர சபையாக்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடமுடியாது. இந்த மாநகரம் துண்டாடப்படுமாக இருந்தாலும், துண்டாப்படுகின்ற போது இந்த நற்பிட்டிமுனை மண் அனாதரவாக்கப்பட முடியாது என்பதற்காகத்தான் தலைமை சில விடயங்கில் மிகவும் அவதானமாக இருக்கின்ற போதிலும், நற்பிட்டிமுனைக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் நான் எந்த பிரேரணைக்கும் ஒப்புதல் அழிக்கமுடியாதென்று நான் திட்டவட்டமாக சொல்லிவைக்க  விரும்புகின்றேன்.

நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் அபிவிருத்திகளைச் செய்வதற்காக ஒதுக்கீடுகளை வரவு, செலவு திட்டத்தில் பெற்றிருக்கின்ற நிலையில், எல்லாவற்றிற்கும் முன் மருதமுனையோடு நற்பிட்டிமுனையை சேர்க்க வேண்டும். மேட்டுவட்டைக்கு குறுக்கே பாதை அமைத்து நற்பிட்டிமுனையோடு மருதமுனையைச் சேர்த்து ஒரு தனி அரசியல் அங்கமாக ஒன்றாக ஒரே3 அலகாக மாற்றியெடுப்பதற்காக சரியான பூகோல அமைப்பு இந்த மண்ணில் உருவாக வேண்டும் என்பதற்கான திட்டங்களை என்னுடைய அமைச்சினூடாக வரையுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவையிட்டவனாகத் தான் நான் உங்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றேன்.

எவ்வளவுதான் அபிவிருத்தியை செய்தாலும், மக்கள் கடந்த காலங்கில் அனுபவித்த கஷ;டங்களையும், நஷ;டகங்களையும் பற்றி மறந்துவிடாத சூழலில் இந்த மண் அனாதரவாக்கப்பட முடியாது. அதற்காகத்தான் இந்த விடயங்களில் மிகவும் கவனமாக இருக்கின்றேன். இந்த வட்டார எல்லைகளைப் பிரிக்கின்ற போது எங்களது உறுப்பினர்களின் தொகையை அதிகரித்துக்  கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் பல தடவைகள் எல்லை நிர்ணயக்குழுவின் முன்னால் போய் வாதாடியிருக்கின்றோம். எங்களால் வாதாடி சொல்லப்பட்ட விதத்தில் அது நடக்காது விட்டாலும்கூட இந்த பிரதேசங்களில் அபிவிருத்தியில் மாநகர சபை அரசியல் பொறுப்பு எங்கள் கைகளில் இருந்த போது இந்த மண்ணுக்கு சரியான பங்ககைத் தர வேண்டும் என்பதில் எமது கட்சியின் சார்பில் இங்கு தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் மிக கவனமாகவும், மிக பொறுப்புணர்ச்சியோடும் அந்த விடயங்களை கையாள வேண்டும் என்று நான் கடுமையான உத்தரவுகளை அவர்களுக்கு விடுத்து வந்திருக்கின்றேன்.

நற்பிட்டிமுனை என்பது இந்த முழு கல்முனைத் தொகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பெரிய விகிதாசாரத்தில் வாரி வாரி வாக்குகளை வழங்கிய பிரதேசம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் மறந்துவிட முடியாது. எனவே இந்த மண்ணை கௌரவிப்பது மாத்திரமல்ல, சதுப்புள வயல் நிலமாக இருந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்றியமைப்பதற்கு பாரிய நிதிஒதுக்கீட்டைச் செய்து, அதில் அரைகுரையாக இருக்கின்ற அனைத்து வேலைகளையும் இந்த வருடம் முழுமையான நிதியினை ஒதுக்கடு செய்து உங்களுக்கான விளையாட்டு மைதானமாக மாற்றியமைக்க இருக்கின்றோம்.

இங்குள்ள சந்தைக்கட்டிடம் எதிர்பார்த்தபடி சரியாக அமையவில்லை. அதனை திருத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. அதற்கான ஒதுக்கீடுகளை செய்து வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் சிறப்பான சந்தைக் கட்டிடமாக ஆக்கித்தரலாம் என்று ஆலோசித்துள்ளோம்.

இந்தப் பிரதேசத்தில் எங்கெல்லாம் பாதை அமைக்கப்பட இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த வருட நிதிஒதுக்கீட்டில் அவற்றைச் செய்து தர உத்தேசித்துள்ளோம். இந்த வருடம் எனது அமைச்சின்கீழ் வரவு செலவு திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கருத்திட்டத்தின் கீழும் 1900 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாரிய அபிவிருத்தியை திட்டமிடுவதற்காக இங்கிருக்கின்ற நீர் நிலைகள், ஆறுகள் அவை வழிந்தோடக்கூடிய வழிவகைகள் இந்த கிட்டங்கி பாலத்திற்கு அப்பால் இருக்கின்ற வெள்ளத்தடுப்பு அணை இவற்றையெல்லாம் முழுமையாக முடித்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் பாரிய பரிமாண மாற்றத்தை ஆரம்பித்திருக்கின்றோம். அதை செய்து முடிக்கின்ற போது மருதமுனையிலிருந்து நற்பிட்டிமுனையையும் பாண்டியிருப்பையும் இணைத்தவையாக கல்முனை சாய்ந்தமருது தொடக்கம் மாவடிப்பள்ளியிலிருந்து சம்மாந்துறை வரையிலான பாரிய நகர அபிவிருத்தி நடந்தேற இருக்கின்றது.
இந்த தாழ்நில பிரதேசங்களில்  வேளாண்மைக்கு ஒரு போகம் மட்டுமே செய்கை பண்ணக்கூடிய நிலையில் இருக்கின்ற வயல் நிலங்களை அடையாளம் கண்டு, எங்களோடு கலந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் சந்தேகங்களையும் சரியாக நிவர்த்தித்து அவர்களுடைய அங்கீகாரத்தோடும், அனுமதியோடும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் நிரப்பி புதிய பாரிய நகர அபிவிருத்தியை அதனூடாக செய்ய இருக்கின்றோம்.

இந்த கல்முனை சம்மாந்துறை மாநகரத் திட்டம் அரங்கேறுகின்ற போது கல்முனை மாநகரத்தின் ஆட்சியும், சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியும் இந்த மக்கள் எங்களுடைய கைகளில் வழமைபோல் தருவார்கள் எங்கின்ற பாரிய நம்பிக்கையோடு இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம். இந்த வெற்றியை யாரும் எங்களிடத்திலிருந்து தட்டிப்பறிக்க முடியாது. மக்களை திசை திருப்புவதற்கான அபத்தமான கதைகளை சிலர் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஐ.தே.கட்சியின் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவது மிகப் பெரிய வருத்தமாக மாறியிருக்கின்றது.

இந்த மாநகர சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதென்பது ஐ.தே.கட்சியின் தலைமைக்கு தெரியாததல்ல. கடந்த பொதுத் தேர்தலின் போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அந்த தலைமை இன்று ஒரு போதுமில்லாத பாரிய நீதிஒதுக்கீட்டை ஒதுக்கித்தந்தது மாத்திரமல்ல, அடுத்தடுத்த வருடங்களும் அதேமாதிரியான ஒதுக்கீடுகளைத் தந்து எங்களது முழுமையான இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்படுவதற்கான முழு ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் நாங்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்த முயற்சியின் பயனாக எங்களுடைய இந்த பிரதேசங்களில் நடக்கின்ற அபிவிருத்திகளுக்கு எதிராக நடக்கும் அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள், சதி முயற்சிகள் என்பவற்றை முறியடிப்பதற்கு வாய்ப்பாகவும் இந்த அணுகுமுறை மாறியிருக்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் மனம் கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஐ.தே.கட்சி சின்னத்தில் இந்த பிரதேசங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளை வெற்றிபெறுவதற்கான வியூகத்தை வகுத்துள்ள அதேநேரம், ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களுடைய சொந்த சபைகளில் வெற்றிபெறுவதற்காக தடுமாறிக் கொண்டிருக்கின்ற பரிதாபமான சூழலை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நாட்டின் அரசியலில் தேர்தலுக்கு பின்னர் சில புதிய திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கருத்துக்களை ஒரு சிலர் பேசி வருகின்றார்கள். ஆனால், எந்த மாற்றம் எப்படியாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற சமன்பாட்டின்படி இன்று ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இருக்கின்ற ஆசன வித்தியாசத்தை வெற்றியின் பால் தீர்மானிப்பது முஸ்லிம் காங்கிரஸின் ஆசனங்களில் தான் தங்கியிருக்கின்றது என்பதை யாரும் மறந்து விட முடியாது. அதற்காக கடந்த காலங்களில் எங்களை கிள்ளுக்கீரையாக பயன்படுத்தி இந்த சமூகத்தின் உரிமைகளில் மிக மோசமாக கைவைத்தது யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.

ஏனென்றால் மீண்டும் அந்த இருண்ட யுகம் வந்து விடாமல் இந்த சமூகத்தை பாதுகாக்கின்ற கடமைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் எந்தக் காரணம் கொண்டும் இங்கிருக்கின்ற பாராளுமன்ற சமன்பாட்டில் எதுவிதத்திலும் ஒரு பலவீனமான நிலைப்பாட்டில் இல்லை என்பது மிக கண்கூடான விடயம். அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரைக்கும் இன்று ஆட்சில் இருக்கின்ற பேரம் பேசும் சக்தியை உச்சகட்டமாக பாவித்து இந்த பிரதேசங்களில் கடந்த காலம் அரைகுறையாக நடைபெற்றுக் கொண்டிருந்த அபிவிருத்தியை அதை பூரணப்படுத்துகின்ற முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை பலவீனப்படுத்துவதற்கு நினைக்கின்றவர்கள், கடந்த காலங்களில் இந்த கட்சியிலிருந்து அனைத்தையும் அனுபவித்தவர்கள் இந்தக் கட்சிக்கெதிரா இன்று அவதூறு பேசுவதைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில் படுமோசமாக செய்கின்ற விமர்சனங்களைப் பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த பிரதேச மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது வைத்திருக்கின்ற அபார நம்பிக்கை மாத்திரமல்ல, எங்களது மறைந்த தலைவரின், மாபெரும் இயக்கமாக இருந்த இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு ஒவ்வொரு கட்டம் கட்டமாக எடுத்த முயற்சிகளில் எவையுமே இதுவரை கைகூடியதில்லை. இனியும் அது நடக்கப்போவதுமில்லை.
வெளியிலிருந்து அமைச்சுப் பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் வெளியேறி வந்த இவர்களையெல்லாம் ஒன்றிணைத்து இந்த பேரியக்கத்திற்கு சவாலாக தாங்கள் புதியதொரு கூட்டணியை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தது பிசுபிசித்துப்போய் அவர்கலெல்லாம் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை தூசிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் மிக கீழ்த்தரமான முறையில் முயற்சித்தவர்கள் தங்களின் சொந்த கிராமங்களிலேயே இன்று தனிமைப்படுத்தப்படுகின்ற நிலவரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த கல்முனை மாநகரையும், சூழவுள்ள பிரதேசங்களையும் நாங்கள் அபிவிருத்தி செய்ய முன்வந்திருக்கின்ற நிலையில் சொந்த சுயலாப நோக்கங்களுக்காக இந்த கட்சியின் ஆதரவாளர்கள் செறிவாக இருக்கின்ற பிரதேசங்களில் ஒரு சரிவை ஏற்படுத்தி விடலாம் என்று எடுத்திருரக்கின்ற முயற்சிகளுக்கு பதிலடியாக அவர்களுக்கு மிகவும் பக்குவமாகவும், நேர்மையாகவும் எங்களுடைய நியாயங்களைச் சொல்லுவதன் மூலம் இந்த கட்சி யாருக்கும் துரோகமிழைப்பதற்காக வந்த கட்சியல்ல. எந்த பிரதேசத்திற்கும் அநியாயம் செய்ய வந்த கட்சியல்ல. அந்தந்த பிரதேசங்களின் அபிலாiஷகளில் குறுக்கே நிற்பதற்கு எத்தனிக்கின்ற கட்சியுமல்ல என்பதை நாங்கள் உணர்த்தி வருகின்றோம். இந்த மண்ணை அலட்சியமாக கூறுபோடுவதற்கு அனுமதிக்க முடியாது என்ற விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் எங்களால் இயன்றவரை ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவையும் அரவணைத்துக் கொண்டு எவ்வாறு நிரந்தரத் தீர்வைக் காண்பது சம்பந்தமான மிகத் தீவிரமான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம். ஆனால் அது முற்றுப் பெறாமல் இருக்கின்ற ஒரு சூழலில் கூட இதற்கான ஒரு நிரந்தரமான தீர்வு வருகின்ற போது அது யாருக்கும் அநீதி இல்லாமல் இந்த சமூகம் அனாதரவாக்கப்படாதவாறு கல்முனையோ சாய்ந்தமருதோ இந்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்படாத ஒரு முடிவை நாங்கள் எட்ட வேண்டும். ஆனால் இது சம்பந்தமாக இந்த மண்ணில் இருக்கின்ற மக்கள் மிகத் தெளிவாக நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்களின் நேர்மையைர் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செய்தி என்பது சகோதர தமிழ் மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய விதமாக அவர்களுடைய அபிலாiஷகளுக்கு குறுக்கே நிற்காத ஒரு தீர்வைப் பற்றித்தான் நாங்கள் தொடர்ந்து சிந்தித்தித்தும் செயலாற்றியும் வந்திருக்கின்றோம். இந்த மாநகர சபைத் தேர்தல் முடிவு பல நிரந்தரமான தீர்வுகளை எங்களுக்கு கொண்டு வந்து தரும். குறிப்பாக இந்த வட்டாரத் தேர்தலும், கலப்புத் தேர்தலும் ஒன்றாக இருக்கின்ற புதிய தேர்தல் முறையின் கீழ் எவ்வாறு  இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட போகின்றது என்பது குறித்த யதார்த்தமான ஒரு விடையை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சொல்லப் போகின்றன. எனவே அதற்கு முன்பு அவசரப்பட்டுக் கொண்டு இந்த கட்சியை பலவீனப்படுத்த வேண்டுமென்று கல்முனையிலும், சாய்ந்தமருதிலும் மாறி மாறி ஏட்டிக்குப் போட்டியாக தாங்கள் நிற்பதான தோரணையில் பாசாங்கு அரசியலை செய்வதற்கு ஒரு சக்தி முயற்சிக்கின்றதென்பது மிகத் தெளிவாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. எங்களை முறியடிப்பதற்கு இந்த மண்ணில் கிளம்பியுள்ள தீய சக்திகளுக்கு சரியானதொரு பாடத்தை புகட்டுவோம் என்றார்.