பண்டாரவலை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எச்.எம்.ஹைதர் மற்றும் எச்.எப்.அப்ஷh ஆகியோரின் தேர்தல் பிரசார காரியாலயமும் அவர்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுகாதார பிரதியமைச்சரும், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான பைசல் காசிம், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் பண்டாரவலை தொகுதி அமைப்பாளருமான சமிந்த வியஜசிறி, முன்னாள் கல்வி பிரதியமைச்சரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சச்சிதானந்தன் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மு.காட்சியின் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்தீன், பதுளை மாவட்ட அமைப்பாளரும், அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளருமான பீ.தாஜுதீன் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் வெலிமட பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் சில்மியாபுர மற்றும் குறுத்தலாவ வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களான பாயிஸை, நசார் ஆகியோரை ஆதரித்து ரேந்தபொல பகுதியில் மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
அப்புத்தள நகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் சவாஹிரை ஆதரித்து அப்புத்தல பகுதியிலும் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அமைப்பாளர் பீ.தாஜுதீன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.