A+ A-

சபீக் ரஜாப்தீன் முகநூலில் தெரிவித்த கருத்தை மு.கா.போராளிகள் வண்மையாக கண்டிப்பு...



கிழக்கு மக்களைப் பற்றி சமூக வளைத்தளமான முகநூலிலே சபீக் ரஜாப்டீன் அவர்கள் மிக மோசமாக விமர்சித்திருப்பதை முஸ்லிம் காங்கிரஸின் போராளியான நாங்கள் வண்மையாக கண்டிப்பதோடு ,முழு கிழக்கு மாகாண மக்களிடமும் அவர் பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும் எனவும் இதற்கெதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அணைத்தையும் கட்சித்தலைமை விரைவு படுத்த வேண்டும் எனவும் கோறுகின்றோம்.

மேலும் இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையினதோ அல்லது கட்சியினதோ கருத்தல்ல என்பதை சொல்லிக் கொள்வதோடு,பொதுமக்களாகிய நாங்கள் இங்கு கவனிக்க  வேண்டியது கருத்து மோதலின் உச்சத்தில் தனிநபரான acmc காரர் ஒருவரை தாக்குவதாக எண்ணி முழு கிழக்கு மக்களையும் தாக்கியிருக்கின்ற முட்டாள்தனமான பிரதேசவாதக் கொள்கையைக் கொண்ட அவரையும் ;அவரை ஒத்த கருத்துக் கொண்ட அணைவரையும் போராளியான நாங்கள் நிராகரிப்போம் என்பதனையும் மிகப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அ.ஓ.அகமட் சிப்ராஸ்,
இளைஞர் பேரவை உறுப்பினர்,
இளைஞர் காங்கிரஸ்.