A+ A-

கபூர் மீது வீணான பழி!



வாளைச்சேனை பிரதேச சபை மாவடிச்சேனை - செம்மண்ணோடை வட்டார வேட்பாளரான ஹக்கீம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி அவட்டார ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரான கபூர் மீது வீணான பழி சுமத்தப்படுகிறது மாற்றுக் கட்சியின் பிரதான ஊடகமான மடவளை நியுஸில் அதன் செய்தியாளரான அஹ்மத் இர்ஷாத் என்பவர் உண்மைக்குப் புறம்பான புரளிகளைக் கிளப்பி விடுவதில் கைதேர்ந்தவர்.

உண்மையில் என்ன நடந்துள்ளது செம்மண்ணோடையில் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் பலகோடி ரூபாய் செலவிடப்பட்டு அமைக்கப்பட்ட கழிவு நீர் வடிந்தோடும் கால்வாய் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்பதும் மழை காலத்தில் பிரதேச சபையின் பெக்கோ வாகனம் கொண்டு சீர் செய்யபடுவதும் வழமையாகும். அந்த பணியினை அப்பிரதேச இளைஞர்கள் சமூக நலன் விரும்பிகள் செய்து வருவது வழமை.

அந்த இடத்தில் அரசியல் நோக்கத்திற்காக பிரதி அமைச்சரின் மைத்துனரும் அவட்டார ACMC வேட்பாளருமான ஹக்கீம் என்பவர் தேர்தல் காலங்களில் பெரும் தாதாவாக தன்னைக் கட்டிக்கொண்டு அடிதடிகளில் பெயர் பெற்றவரும் கடந்த தேர்தல் காலங்களில் வன்முறையாளர்கள் என பெயர் குறித்து அடையாளப்படுத்தப்பட்ட சம்மூன் என்பவர் பொல்லை எடுத்து அடித்து அங்கிருந்த இளைஞர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் அடிவாங்கியவர்கள் கராட்டி பயிற்சி பெற்றவர்கள் என்பதை அறியாது பழைய ரவுடித்தனத்தைக் காட்டியுள்ளார் தற்காப்பு நடவடிக்கைக்காக அவர்கள் எதிர் தாக்குதல் நாடாத்தியதில் சம்மூன் என்பவரும் ஹக்கீமும் வாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதே நேரம் குறித்த தாக்குதலில் காயமடைந்த ரியாஸ், அஸ்கர் என்ற இருவரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதுடன், இவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரான கபூரின் ஆதரவாளர்கள் என்று அறியக் கிடைக்கிறது. இதேவேளை அவ்வட்டார வேட்பாளரான கபூர் என்பவர் சம்பவ இடத்தில் இல்லை என்பதுடன் சின்னம்மை மற்றும் காய்ச்சலினால் வீட்டை விட்டு மூன்று தினங்களாக வெளியேறவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.