உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டுயிடும் தெளபீக் எம்பி??!!!
உள்ளூராட்சி மன்றங்களுக்காக மக்களின் ஆதரவோடு தன்னால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனை வேட்பாளருக்கும் ஆதரவு தேடி வீடுவீடாகப் பிரச்சாரம் செய்யும் அத்தனை தகுதிகளும் இதார்மீக உரிமைகளும் ஏணைய பாராளுமன்ற உறுப்பினர்களைவிடவும் கெளரவப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கொண்டிருக்கின்றார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.
எனெனில் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே மக்களால் அதிக வாக்குகள் வழங்கப்பட்டு நாம் தேர்வு செய்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓர் இரு விதிகளைத் தவிர அபிவிருத்தி என்று குறிப்பிட்டு சுட்டிக் காட்டுவதற்கு ஏதுமற்றதாகவே இருக்கும் நிலையில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ தலைமை அமைச்சர் ரவுப் ஹக்கீமால் நியமனம் செய்யப்பட்ட தெளபீக் எம்பி அவர்கள் குறுகிய காலத்திற்குள்ளயே எங்கு பார்த்தாலும் கார்பட் வீதிகள்இமகாவலி அபிவிருத்தித் திட்டம்இபல்கலைக்கழகக்கல்லூரி ஒதிக்கீடுஇபல பாடசாலைகளுக்கான கட்டிட நிர்மானம்இபல மைதானங்கள் இகிண்ணியா பிரதான விதியினை அகலமாக்குவதற்கான செயற்பாடு என நீண்ட பட்டியலாக நீட்சி பெறுகின்றது..
எனவே இவ்வாறான பல பாரிய அபிவிருத்திகளை செய்தும்; செய்வதற்கான திட்டங்களை வகுதுத்துக் கொண்டிருக்கும் எமது மாவட்டத்தை தலைமையை 'வட்டாரத்தில் அவர் போட்டியிட்டிருக்கலாமே!'சின்னுக்கு வேட்பாளர் போட்டிருகின்றார்' என்றெல்லாம் விமர்சனம் செய்யும் அரசியல் காழ்புணர்வு பீடித்த வங்குரோத்து அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களின் செயற்பாடுகளும் இவிமர்சனங்களும் நகைப்புக்குரியதாகும்.
மேலும் ஒரு தந்தை தனது பிள்ளைகளை சரிவர கவனித்து வளர்த்துஇ பிற்பட்ட காலத்தில் தனக்கு தேவையான அனைத்து உதவிகளையும்இபாதுகாப்பையும் கோருவதற்கு எவ்வளவு உரித்துடையவரோ அது போல இந்த சமூகத்திற்காகவே தன்னை அர்பனித்து செயற்படும் எம்.எஸ் இற்கும் வாக்குக் கோறும் சகல தார்மீக உரிமையும் உண்டு என்பதை விடவும் அவரால் போடப்பட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடுடைய மக்களாக நாமிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.
மேலும் நீங்கள் சொல்வதைப் போன்று போட்டியிடுவதென்றாலும் கிண்ணியா நகர பிரதேச சபைகளிலுள்ள 16 வட்டாரங்களிலும் தனி நபராக போட்டியிட்டு வெற்றியிட்டும் ஆளுமையும் தகைமையையும் கொண்டவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.தெளபீக் என்பதையும் மறந்து விட வேண்டாம்.
அகமட் சிப்ராஸ்
கிண்ணியா.