தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்படும் 2018ஆம் ஆணடுக்கான அபிவிருத்தித்திட்டங்களை துரிதப்படுத்துமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரலவருமான ரவூப் ஹக்கீம்;, உத்தரவிட்டார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (28) முற்பகல் நடைபெற்றபோதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கொழும்பு பிரதேசத்தில் ஏற்படுத்தப்படுவரும் பாரியளவிலான அபிவிருத்தித்திட்டங்கள் பூர்த்தியாகும்போது தேவைப்படக்கூடிய குடிநீர் தொடர்பாக ஏற்படும் கேள்விக்ளுக்கு போதிய நீரைப் பெற்றுக் கொடுக்கவும், வரட்சி காலங்களில் களுகங்கை மற்றும் களனி கங்கை பிரதேசங்களில் ஏற்படக்கூடிய குடிநீரில் உவர் நீர் கலப்பதை தவிர்க்க உவர் நீர் தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டத்தினை விரைவுபடுத்தம் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்பொது, அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நீர் வழங்கல் திட்டங்களின் வேலைகளை விரைவுபடுத்துமாறும், உத்தேச நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகளையும், உவர் நீர் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்தற்கான தீர்மானங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், உப தலைவர், பொது முகாமையாளர் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.