A+ A-

சீன அரசாங்கத்தின் உதவியால் 2.5 பில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர் தொடர்பாக ஆய்வுகூடம்









சீன அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் 2.5 பில்லியன் ரூபா உதவியால் அடையாளப்படுத்தபடாத காரணிகளால் ஏற்படும் சிறுநீரக நோய்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்தல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கு வசதியாக நீர் பற்றிய உயர் தொழிநுட்ப ஆய்வு கூடமொன்றை அமைக்கும் பணிகள் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேராதெனிய பல்கலைகழக வளவில் அமைக்கப்பட்டுவரும் இந்த ஆய்வுகூட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன அரசாங்கத்தின் உதவியால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏனைய நீர் வழங்கல் கருத்திட்டங்களை விரைவுபடுத்தச் செய்வதற்கான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நகர திட்டமிடல் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சீன அரசாங்கத்துடன் நகர திட்டமில் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு செய்து கொண்டுள்ள புரிந்தணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்த உயர் தொழிநுட்ப வசதிகளைக் கொண்ட நீர் பற்றி அய்வு கூடத்திற்கான ஆரம்ப வேலைகள் முடிவுற்ற நிலையிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

உத்தேச ஆய்வுகூடத்தின் கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2 வருடக்காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகள் முடிவடைந்தும் சர்வதேச நிபுணர்களின் தலைமையில் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்காலத்தில் நவீன உயர்தொழிநுட்பத்தை கொண்ட இந்த ஆய்வு கூடம் சீன விஞ்ஞான நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட் இணக்கப்பாட்டுக்கு அமைவாக கூட்டக செயற்படுத்தப்படுவதுடன் குறிப்பாக பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் கட்டியமைக்கப்பட்ட சர்வதேச தரத்தைக் கொண்ட நிறுவனமாக இது செயற்படும்.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மெற்கொள்ளப்பட்டுவரும் ஏனைய குடிநீர் திட்டங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டபோது பாரிய கொழும்பு அபிவிருத்தித் திட்டம் அமுல்படத்தப்பட்டு வருவதால் அமைக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் உல்லாசப் பயண ஹோட்டல்கள் என்பவற்றுக்கு அவசரமாக தேவைப்படக்கூடிய குடிநீர் தேவையை ஈடு செய்யக்கூடிய வகையில் 50,000 கன மீட்டர் அளவுடைய நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பதல குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் அமைத்தல், மேலும் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காணும் வகையில் திட்டமிடப்படுள்ள 'வீஒயா' நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தாயரிக்கும் பணிகள் 'மஹாவெலி கன்ஸ்ட்ரக்ஷன் பியுறோ' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான சீன அரசின் நிதியுதவிகளை அவரசரப்படுத்த வேண்டியிருப்பதாக அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டதுடன் நிதியமைச்சுடன் இது தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள சீன தூதுவராலயத்தின் கொருளாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தற்போது களுத்துறை பிரதேசத்தில் குடிநீரில் உவர் நீர் கலப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் இத் திட்டத்திற்கு விரைவாக தீர்வு காண்பதன் மூலம் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள வஸ்கடுவ களுத்துறை, பயாகல, பேருவளை, அளுத்கம, பாகொட தர்கா நகர முதலான பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணமளிக்க வாய்ப்பேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சீன விஞ்ஞான நிறுவனத்தின் பேராசிரியர் யூஎன்சொங் செய் தலைமையிலான தூதுக்குழுவின், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம் நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர்களான நலின் எஸ். வுpஜயதுங்க, எஸ். வுpஜயமன்ன உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.