A+ A-

அத்தனகல்ல பிரதேச சபையில் 5 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெற வாய்ப்பு!





நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திஹாரிய இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஐதேக சார்பாக போட்டியிட்ட சகோதரர்களான அஷ்ரப், நவாஸ் ஆகியோர் வெற்றியடைந்துள்ளனர். அத்துடன் கஹட்டோவிட்ட வட்டாரத்தில் ஐதேக இல் போட்டியிட்ட சகோதரர் நஜீம் JP வெற்றி பெற்றார்.  

இது தவிர அத்தனகல்ல பிரதேச சபைக்காக தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளான முகா, நதேமு என்பன சகல வட்டாரங்களிலும் தோல்வியடைந்திருந்தாலும் விகிதாசார முறையில் தலா 1 ஆசனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -