A+ A-

ரவூப் ஹக்கீம் தலைமையில் குவைத் பிரதிநிதிகள் கண்டி விஜயம்








ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் குவைத் நாட்டின் பிரதிநிதிகள் இன்று (16) கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். 

கண்டி மாவட்டத்தில் எந்தருதென்ன, திகன, குருந்துகொல்ல, கட்டுகஸ்தோட்டை, பூஜாப்பிட்டிய, அக்குறணை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகளை நேரில் சென்று பார்வையிட்ட இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுப்பதாக இதன்போது தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும்நோக்கில் நேற்று (15) அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே, குவைத்  நாட்டின் பிரதிநிதிகள் இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கண்டி கலவரத்தில் நேரடியாக களத்தில் நின்று போராடிய அமைச்சர் என்றவகையில், அடுத்தகட்டமாக மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.