கல்பிட்டி வைத்தியசாலைக்கு 50 கோடி பெறுமதியான 3மாடி கட்டிடம் .
கல்பிட்டி வைத்தியசாலைக்கு 50 கோடி பெறுமதியான 3மாடி கட்டிடம் வழங்கப்படவுள்ளது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், சுகாதார பிரதியமைச்சருமான பைஸல் காஸிம் அவர்களினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் கடந்த இரு வருடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சுகளினூடாக பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் கடந்த பிரதேச சபை தேர்தலிலும் கல்பிட்டி நகர மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பூரணமாக ஆதரிக்காத போதும் கல்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திக்கு ரூபா 60 கோடி வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்களின் முயற்சியால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் 2018/03/17 இன்று சுகாதார பொறியியலாளர் குழுவுடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்கள் கல்பிட்டி வைத்தியசாலைக்கு சென்று முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் 3 மாடி கட்டிடத்திற்கு 50 கோடி ரூபாவும், இவ்வைத்தியசாலையின் வைத்திய உபகரணங்களுக்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(புத்தளம் ரிசான் )