A+ A-

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் திருமதி மும்தாஸ் ஸறூக் காலமானார்




சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் திருமதி மும்தாஸ் ஸறூக் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சிரேஷ்ட பெண் ஊடகவியலாளருமான திருமதி மும்தாஸ் ஸறூக் தனது 63வது வயதில் இன்று அதிகாலை காலமானாhர். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இலக்கம் 438, லேக் சிட்டி, ஜா-எலயில் (ஜா.எல பேரூந்து நிலையத்திற்கு அருகில்) அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (28) மாலை 4.00 மணிக்கு (அஸர் தொழுகையைத் தொடர்ந்து) மாபோல ஜூம்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான திருமதி மும்தாஸ் ஸறூக்கின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவிக்கிறது.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

மன்னார் மூர்வீதியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மும்தாஸ் ஸறூக், ஆரம்ப காலத்தில் வீரகேசரி பத்திரிகையில் ஊடக தொடர்பாளராக இருந்து செயற்பட்டதுடன் மிக நீண்ட காலமாக அதாவது இறுதிவரை சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டு வந்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதி எழுத்தாளரான இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்ட கால நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்து போரத்தின் வளர்ச்சிக்காகவும், ஊடக வளர்ச்சிக்காகவும் ஒரு பெண் உறுப்பினராக அவர் ஆற்றிய சேவை பாராட்டுக்குறியது.
அரச கலாபூஷண விருதையும் வன்னி ஊடகத்தாரகை என்ற பட்டத்தையும் பெற்ற இவர் ஊடகத்துறைக்கு பெண் ஊடகவியலாளர் என்ற வகையில் பாரிய சேவையாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் ஸறூக்கின் மனைவியான இவர் மர்ஹூம் ஷெரீன் மற்றும் பர்ஸான் ஆகிய இரு ஆண் பிள்ளைகளின் தயாராவார்.

அன்னாரது மறைவு ஊடகத்துறைக்கு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அன்னாருக்கு மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவத்தை அடைய பிராரத்திப்பதாகவும் போரத்தின் தலைவர் விடுத்துள்ள அனுதாப அறிவிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி, வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்
                                         
என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்