ண்டி, திகன பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலகக்காரர்களின் தாக்குதல் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் பரவியபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
கட்டுகஸ்தோட்டையில் முஸ்லிம்களின் சில வர்த்தக நிலையங்களும், வீடுகளும் தாக்கப்படும்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிரடியாக செயற்பட்டு பொலிஸாரை உடனே ஸ்தலத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு பலப்படுத்தினார். இதனால், கலகக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
அத்துடன் மடவளை பிரதேசத்திலும் தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சம் காணப்படுவதால், ஊருக்குள் நுழையும் பிரதேசங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடைபெறாதவாறு பாதுகாப்புத் தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.