அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளை மீளமைக்கும் நிகழ்வு கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாசத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் (31) காலை 9.30 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமானது. 3 கிராமங்களையும் சேர்ந்த அதிகமான உலமாக்கள் வருகை தந்திருந்தனர். ஷெய்க் உமைர் ஹாஷிமியின் கிராஅத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
பின்னர் வரவேற்பு உரை மற்றும் தலைமை உரையினை கஹட்டோவிட்ட கிளையின் முன்னாள் தலைவர் ஷெய்க் ன ஷாஹுல் ஹமீத் ஜிப்ரி அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து முன்னாள் செயலாளர் ஷெய்க் அப்துஸ் ஸலாம் பலாஹி அவர்களினால் சென்ற கால அறிக்கை வாசிக்கப்பட்டது.
பின்னர் ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்களின் கருத்துரை இடம்பெற்றது. அதன்பின் ஷெய்க் முஜீப் கபூரி அவர்களினால் 3 கிராமங்களைப் பற்றிய அறிமுக விளக்கமும், ஷெய்க் இஜ்லான் காஸிமியின் கருத்துரை இடம்பெற்றது.
தொடர்ந்து ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையக பிரதிநிதியால் ACJU பற்றிய அறிமுகம் இடம்பெற்றது. அதன் பின்னர் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளையின் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக ஷெய்க் அப்துஸ் ஸலாம் பலாஹி அவர்களும், உப தலைவர்களாக ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்கள் மற்றும் ஷெய்க் முஜீப் கபூரி அவர்களும், செயலாளராக ஷெய்க் ரம்ஸி அலி அவர்களும், உப செயலாளராக ஷெய்க் ஸல்மான் உஸாமா அவர்களும் பொருளாலராக ஷெய்க் ஸஹ்ரான் அவர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -