பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கராச்சி மாவட்ட பெரு நகராட்சி மற்றும் இளம் சமூக சீர்திருத்தவாதிகள் கழகம் இணைந்து நடத்திய பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சருடன் சென்றிருந்த புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.