அமைச்சர் ரவூப் ஹக்கீகும் பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷாவுக்குமிடையிலான சந்திப்பு
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷாவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (13) எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
எதிர்கட்சித் தலைவரின் இல்லத்துக்கு சென்ற தலைவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.