1818 ஆம் ஆண்டு நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக நடைபெற்ற வெல்லஸ்ஸ விடுதலைப் போராட்டத்திற்கு 200 வருடங்கள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட "வெல்லஸ்ஸே அபிமன் 200" தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்ற ஆய்வொன்று இன்றைய தினம் (17) காலை வேளையில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில், அரசாங்க நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செப்டம்பர் 5 ஆம் திகதி கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகும் இந்நிகழ்வு, செப்டம்பர் 5 அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நிறைவுக்கு வரும். வெல்லஸ்ஸவின் வீரர்கள் குறித்து மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்தும் கௌரவ அமைச்சரின் எண்ணத்தின் படி உருவானதே இந்த தேசிய வேலைத்திட்டமாகும். ஷ
இதற்காக சகல அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்புக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இன்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் வைத்து "வெல்லஸ்ஸே அபிமன் 200" இணையத்தளமும் (www.UvaWellassa.lk) அமைச்சரின் கரங்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, மின் சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேந்திர படகொட மற்றும் அமைச்சுக்கள், ஏனைய அரச நிறுவன பிரதானிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி,
அரசாங்க நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சு