A+ A-

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதி அமைச்சர் பைசால் காசீம்!






சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திற்கு 1 கோடி ரூபா நிதியினை சுகாதார பிரதி அமைச்சர் பைசால்காசீம் ஒதுக்கீடு செய்து தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என வைத்தியசாலை அபிவிருத்தி சபைசெயலாளர் றியாத் மஜீத் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிரதி அமைச்சர் பைசால் காசீம் மற்றும்  வைத்தியசாலை அபிவிருத்தி சபையினருக்குமிடையேயான சந்திப்பு கடந்த 21.04.2018ம் திகதி பிரதிஅமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றிருந்ததுஇச்சந்திப்பில் வைத்து பிரதி அமைச்சர் பைசால் காசீம்வைத்தியசாலை அபிவிருத்தி சபையினருக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே இந்நிதியினை ஒதுக்கீடுசெய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமின் பணிப்புரைக்கு அமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலையின்திருத்த வேலைகளுக்காக அதாவது விடுதிகளுக்கான சீலிங் சீட் மற்றும் விடுதிகளுக்கான பாதுகாப்புஅலுமினிய வலை பொருத்துதல் வேலைகளுக்கு 5 மில்லியன் ரூபாவும்வைத்தியசாலையின் கூட்ட மண்டபநிர்மாணத்திற்கு 5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின்  பிரதிப் பணிப்பாளர்நாயகம் (நிதிகே.டி.எல்.ஜி.குணவர்தன 11.05.2018ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் பத்தரமுல்ல கட்டடங்கள்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஆர்.ஜெயச்சந்திரனுக்கு அறிவித்துள்ளதுடன் வேலைகளைஆரம்பிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.


வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு செய்துதந்த பிரதி அமைச்சர் பைசால் காசீமுக்குவைத்தியசாலை அபிவிருத்தி சபை சார்பாகவும் வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள்சார்பாகவும் சாய்ந்தமருது மக்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் செயலாளர் றியாத் . மஜீத்மேலும் தெரிவித்தார்.

(றியாத் .மஜீத்)