A+ A-

கண்டி மாவட்டம், உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.


கண்டி மாவட்டம், உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் திங்கள்கிழமை (21) உடபலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டதுடன், அப்பிரதேச மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், கழிவு நீர், குப்பை அகற்றல், குடிநீர்ப் பிரச்சினைகள், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ன, கம்பளை நகர சபை தவிசாளர் பீ.எம்.அருண குமார, உடபலாத்த பிரதேச செயலாளர் துஷhரி தென்னகோன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட உயரதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.