சியனே ஊடக வட்டம் (Siyane Media Circle) ஏற்பாடு செய்துள்ள கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் எதிர்வரும் ஜூன் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வு மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
நிகழ்வுகள் சியனே மீடியா சேர்கிலின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் அவர்களின் தலைமையில் நடைபெறும். பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகரும், இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவருமான அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்புப் பேச்சாளராக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுடன், பிரதேச உலமாக்கள், புத்திஜீவி கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)