A+ A-

ஊவா மாகாணத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.




ஊவா மாகாணத்தில் பதுளை, மொனராகலை மாவட்டங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (22) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பதுளை, தெமோதர, ஹாலிஎல்ல ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய செயற்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

உமா ஓயா திட்டத்தின் விளைவாக குடிநீர் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு துரிதகெதியில்  சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வெலிமட, பொரகஸ் மற்றும் குறுத்தலாவ பகுதிகளுக்கும் குடிநீர் திட்டங்களைத் துரிதப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்தர சமரவீர, அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, மேலதிகச் செயலாளர்களான ஏ.சீ.எம்.நபீல், எல்.மங்கலிகா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைத் தலைவர், கே.ஏ.அன்சார், பிரதித் தலைவர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் அமைச்சரின் பதுளை மாவட்ட இணைப்பாளர் பீ.தாஜுதீன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.