சாய்ந்தமருது வைத்தியசாலையில் மிஸ்ரோ அமைப்பின் சிரமதானப் பணி இன்று காலை (01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசுலுல் இலாஹி, வைத்தியர் சனூஸ் காரியப்பர் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைசெயலாளர் றியாத் ஏ. மஜீத் ஆகியோரின் பங்குபற்றலுடன் சாய்ந்தமருது மிஸ்ரோ அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார், உப தலைவர்எப்.எம்.முஸ்தாக், செயலாளர் எம்.எம்.சுஜா, பொருளாளர் ஏ.எம்.இஜாஸ் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைஉறுப்பினர்கள் எனப் பலரும் இச்சிரமதானப் பணியில் கலந்து கொண்டனர்.
சிரமதானப் பணி மூலம் வைத்தியசாலை வளாகத்தினை சுத்தப்படுத்தி தந்த சாய்ந்தமருது மிஸ்ரோ அமைப்பினருக்கு வைத்தியசாலையின் வைத்தியஅதிகாரி, வைத்தியசாலை அபிவிருத்திச் சபை என்பன தங்களது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளன.
(றியாத் ஏ. மஜீத்)