சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றது.
27 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த சத்திர சிகிச்சைக்கூட மேசை, சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காஸிமின் முயற்சியினால் சுகாதார அமைச்சின், உயிரியல் மருத்துவ பொறியியல் சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹீர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.